Tuesday, August 6, 2013

நோன்புப் பெருநாளை முன்னிட்டு விருதோடையில் மாபெரும் விளையாட்டுப்போட்டி

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஈதுல் பித்ர் -நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப் போட்டியொன்யை விருதோடை யுனைடட் யூத் கிளப் இவ்வருடமும் வெகு விமரிசையான நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.

பெருநாள் தினத்தன்று நன்பகல் 2.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த விளையாட்டுப் போட்டியில் பல்வேறுபட்ட போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு வெற்றி பெறும் வீரா்களுக்கு பெறுமதியான பரிசிகளோடு நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்குவதற்கு ஏற்பாட்டுகள் செய்யப்பட்டுள்ளன. புனித பெருநாள் தினத்தன்று அனைவரும் வந்து கண்டுகளிக்குமாறு ஏற்பாட்டுக் குழு மிக்க மகிழ்ச்சியுடன்  அழைப்பு விடுக்கின்றது. 

விருதோடை யுனைடட் யூத் கிளப்

Disqus Comments