Sunday, October 6, 2013

ஆசிரியா் தினத்தில் 850 பேருக்கு பட்டதாரி ஆசிரியா் நியமனம்

”கல்வியின் மூலம்  சிறந்த உலகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர்களுக்கு விடுக்கப்படுகின்ற அழைப்பு” என்பதே இம்முறை சர்வதேச ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

யுனெஸ்கோ நிறுவனத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட சர்வதேச ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி இலங்கையில் முதற் தடவையாக அனுஷ்டிக்கப்பட்டது.

சர்வதேச ஆசிரியர் தின பிரதான நிகழ்வையொட்டி இன்று 850 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையில் உள்ள ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தற்போது எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பள முரண்பாட்டினை நீக்குவதற்காக ஏற்கனவே குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Disqus Comments