உலகில் சுமார் 120 கோடி பேர் நாளொன்றுக்கு 75 ரூபாவிற்கும் குறைவான
வருமானத்துடன் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி
மூன் தெரிவித்துள்ளார்.
உலக வறுமை
ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மூன் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்
குறிப்பிடப்பட்டுள்ளது.
1990 முதல் 2010 வரையிலான காலத்தில் 70
கோடிக்கும் அதிகமானோர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2008
பொருளாதார தேக்க நிலைக்குப் பிறகு சில நாடுகளில் வறுமை அதிகரித்துள்ளது.
தற்போதைய
புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலகில் சுமார் 220 கோடி பேர்
நாளொன்றுக்கு 75 ரூபாவிற்கும் குறைவான ஊதியத்துடன் வாழ்கின்றனர். 240 கோடி
பேர் நாளொன்றுக்கு 120 ரூபாவிற்கும் குறைவான ஊதியத்தில் வாழ்க்கை
நடத்துகின்றனர்.
உலக நாடுகளில் பல கோடி பேர் இன்னமும் பசியால்
வாடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும். ஒருவர்கூட வறுமையில் வாடக்கூடாது
என்ற கொள்கையுடன் ஐநா தீவிரமாக செயற்பட்டு வருகிறது. என அவர் தனது
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்