Thursday, December 25, 2014

தா்கா நகரில் திறக்கப்பட்ட ஜனாதிபதி தோ்தல் அலுவலகம் ஊா் மக்களால் தகா்ப்பு

அளுத்கம, தர்கா நகரில் ஜனாதிபதியின் தேர்தல்(ஐக்கிய மக்கள் சுதந்திரச் கூட்டமைப்பு) அலுவலகம் ஒன்றை திறக்க முற்பட்டு அது தோல்வியில் முடிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட ஒரு ‘ஆறு’ பேர் கொண்ட குழுவால் தமது சொந்த நலனுக்காக இவ்வாறு ஒரு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இன்று காலை வேளையில் அந்த தற்காலிக அலுவலகம் கல் வீசித் தாக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் இவ்வாறு ஒரு அலுவலகத்துக்கு பொது மக்கள் ஆதரவு இல்லையென்பதை அறிந்தும் வலுக்கட்டாயமாக இவ்வலுவலகம் திறக்கப்பட் முனைந்ததும் அதன் பின்னணியில் ஒரு சில முஸ்லிம்களே இருந்தபோதும் இந்தெரியாதோரால் அவ்வலுவகம் தாக்கப்பட்டு பதாதைகள் கிழிந்த நிலையில் காணப்பட்டதால் அதன் திறப்பு விழா என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு மக்கள் அச்சம் காரணமாக செல்வதைத் தவிர்த்துக்கொண்டதாகவும்அறிய முடிகின்றது.
படங்கள். (Riham Hamsik)



Disqus Comments