மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சித்திரா மன்திலக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து தனது தீர்மானத்தை சித்ரா மன்திலக்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தேர்தல் பிரசார அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக தாம் செயற்படுவதாகவும் இதன்போது அவர் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார்.
1977ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியில், வினைதிறனான அரசியலில் ஈடுபட்டுவந்த சித்ரா மன்திலக்க, 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மத்திய மாகாண சபைக்குத் தெரிவாகியிருந்தார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட, பாத்ததும்பர தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.