ஊடகவியலாளர்கள் என்போர் செய்திகளை வெகுஜன ஊடகங்களினூடக
பரப்புபவர்களாக உள்ளனர். இந்த வெகுஜன ஊடகத்தினூடாக முன்வைக்கப்படும் செய்திகள்
பெருந்திரளான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைகிறது. எனவே இந்த செய்திகள்
உண்மையானவையாக இருக்கவேண்டும் என்பது ஊடகத்துறையில் மிகப்பிரதானமான பண்பாக உள்ளது.
அதனடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களில் காணப்படும் எல்லாவிதமான
கருத்துக்களையும் மக்கள் முன் வைக்கலாமா? பரப்பலாமா? பல்லின
சமூகத்தில் முரண்பாட்டை அதிகரிக்கத்தக்க வகையில் செய்திகளை முன்வைக்கலாமா?
பெண்
ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சம்பவத்தை செய்தியாக்குகின்ற போது, எப்படி
செயற்படுவீர்கள்? படம் உட்பட அனைத்து செய்திகளையும் வெளியிடுவீரா? எதையாவது
தவிர்ப்பீரா? ஏன்?
குறித்த
செய்தியொன்றை வெளியிடவேண்டாம் என ஒருவரும், வேறொரு
செய்தியொன்றை வெளியிடுவதற்காக வேறு ஒருவரும் தரும் அன்பளிப்பு பொருளை நீங்கள் ஏற்பீர்களா? ஏற்க
மாட்டீர்களா? ஏன்?
இந்த
கேள்விகளுக்கு விடையளிக்க முற்படும்போது உங்கள் கனவத்திற்கு வரும் விடயங்கள் எவை? எதை
மனதில் கொண்டு பதில்களை முன் வைத்தீர்கள்?
இரண்டு
வெவ்வேறு இனங்களை சார்ந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக பொது இடத்தில் மோதலில்
ஈடுபடுகிறார்கள். அது குழு மோதலாக உருவாகிவிட்ட நிலையில், செய்தியாகிறது
என வைத்துக்கொள்வோம். இதை அறிக்கையிடுகின்றபோது, இன
ரீதியான இனங்காட்டலை முன்னிறுத்தி அந்த செய்தியை பரப்பலாமா? அது
சமூகத்தில் எத்தகையை எதிர்விளைவை உருவாக்கும்? இது
குறித்த இனம் சார்ந்த மதிப்பீடு, எதிர்ப்புணர்வு, சில
வேளைகளில் சமூகக் குழப்பத்தையும் உருவாக்கி நிலைமையை மேலும்
மோசமாகக்கிவிடும்.இங்கு ஒரு ஊடகவியலாளருக்கு சமூக பொறுப்புணர்வும், பாரபட்சமற்ற
தன்மையும் தேவைப்படுகிறது. பல்லின சமூகத்தில் பக்கம் சாராமல் பொறுப்புணர்வுடன்
செயற்படவேண்டியுள்ளது.
அடுத்து
பொதுவாகவே தெற்காசிய நாடுகள் கலாசாரத்தால் கட்டுண்டவை. எனவே பெண் பாலியல்
வல்லுறவுக்குட்படும் சம்பவத்தை வெளிக்கொண்டுவர அவர்கள் விரும்புவதில்லை. அப்படி
வெளிவந்தால் அது அந்த பெண்ணை மட்டுமல்ல முழுகுடும்பத்தையுமே பாதிக்கும் என
நம்புபவர்கள். எனவே செய்திகளில் பாதிக்கப்பட்ட பெண்களை முழுமையாக
இனங்காட்டுவதில்லை. படங்களை முற்றாக தவிர்க்கிறோம். உண்மைப் பெயர்களைத் தவிர்க்கிறோம்.
இது எமது சமூகப்பொறுப்பாக உள்ளது. இதே போல்தான் ஊடகத் தொழிலின் நிமித்தம்
ஒருவரிடம் இருந்து பெறுகின்ற அன்பளிப்புகள் எமது சுதந்திரத்தை பாதிப்பதாக
எண்ணுகிறோம். அன்பளிப்பினூடாக எம்மை, சம்பந்த
பட்ட நபர் கட்டுப்படுத்துகிறார். தழிழில் ஒரு பழமொழி உண்டு. ’நக்குண்டார்
நாவிழந்தார்’ என்பர். எனவே மேற்கூறிய விடயங்களிலும் எமது தீர்மானம் எமது
சமூகப்பொறுப்பு சார்ந்தும் தொழில் பொறுப்பு கௌரவம் சார்ந்தும் எடுக்கப்பட்டவை..
பொதுவாகவே
ஊடகங்கள் பற்றி குறிப்பிடுகையில் 'ஐனநாயகத்தின்
நான்காவது துாண்', 'குரலற்றவா்களின் குரல்' என
கூற்றுக்களை முன்வைத்து தொழிலின் கௌரவத்தை பறைசாற்றுகிறோம். எனவே மக்களின் குரலாக
ஒலிக்கின்ற போது ,சமூகப் பன்மைத்துவத்தை விளங்கிக்கொண்டு செய்திகளை
அறிக்கையிடுவதே தொழில் பொறுப்பு.
எனவே இத்தகைய தொழில் சார் முடிவுகளை எப்படி எடுப்பது? எதனடிப்படையில் எடுப்பது? இந்த இடத்தில் ஊடகத் தொழிலுக்கான ஒழுக்க நெறிமுறை ஒன்று இருக்கின்றபோது அதனடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும். அதனடிப்படையில்தான் ஊடகவியலாளர்கள் செய்ற்படுகிறார்கள் என்பதை மக்களும் தெரிந்து கொள்வர்.
எனவே ஊடகவியலாளர்களுக்கான ஊடக ஒழுக்க நெறிமுறைகள் அவர்கள் தொழிலில் சிறந்த முடிவுகளை எடுக்கவும், தொழிலின் உன்னதத்தை பேணவும் ,சில தருணங்களில் ஊடகவியலாளர்களை பாதுகாக்கவும் ஊடகவியலாளர்களுக்கான நெறிமுறைகள் தேவைப்படுகிறது. இதனால் ஊடகவியலாளர்கள் இணைந்து இந்த நெறிமுறைகளை உருவாக்கியுள்ளனர். அதுவே 'ஊடக ஒழுக்க நெறிமுறைகள்' அல்லது 'ஊடக ஒழுக்க நியமம்' என்று கூறப்படுகிறது.
ஒரு தொழில் துறையின் குழுமத்துடன் ஒருவர் தன்னை இணைத்து இனங்காட்ட அந்த தொழில் துறைக்கான ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்றவேண்டியவராகிறார். வைத்தியர் ,கணக்காளர், வழக்கறிஞர் என்ற துறைசார் தொழில் வாண்மையாளர்கள் அவர்களின் தொழில் பொறுப்புடன் ஒழுக்கக் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தொழிலை செய்கின்றபோது தான் அதற்கான கௌரவம் கிடைக்கிறது. அத்தொழில் மதிக்கப்படுகிறது. தனித்தன்மை வாய்ந்ததாக இனங்காணப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் சத்தியப்பிரமாணமும் எடுத்துக்கொள்கின்றனர். இதே போல்தான் ஊடகவியலாளர்களுக்கும் அவர்களின் தொழில் பொறுப்பிற்கும் கௌரவத்தையும் பேணும் ஊடக ஒழுக்க நெறி அவர்களால் பின்பற்ற படவேண்டும்.
ஊடக
ஒழுக் நெறியின் தோற்றுவாய்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பத்திரிகையாளர்களுக்கென ‘ஒழுக்கக் கோவை’ ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற உணர்வு அமெரிக்காவில் தோன்றியது. அமெரிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (American Society of Newspaper Editors) 1923இல் ஒழுக்கக் கோவை ஒன்றைத் தயாரித்தது. அது ‘பத்திரிகையியல் நியதிகள்’ ('Canons of journalism')என்றே அழைக்கப்பட்டது. அத்துடன்‘ A Free and Responsible Press.’ என்ற தலைப்பில் 1947 இல் The Hutchins Commission ஆல் வெளியிடப்பட்ட நூல் ஊடகங்களுக்கான ஒழுக்க நெறி(media ethics) பற்றி குறிப்பிட்ட முதல் தருணமாக கொள்ளப்படுகிறது.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பத்திரிகையாளர்களுக்கென ‘ஒழுக்கக் கோவை’ ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற உணர்வு அமெரிக்காவில் தோன்றியது. அமெரிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (American Society of Newspaper Editors) 1923இல் ஒழுக்கக் கோவை ஒன்றைத் தயாரித்தது. அது ‘பத்திரிகையியல் நியதிகள்’ ('Canons of journalism')என்றே அழைக்கப்பட்டது. அத்துடன்‘ A Free and Responsible Press.’ என்ற தலைப்பில் 1947 இல் The Hutchins Commission ஆல் வெளியிடப்பட்ட நூல் ஊடகங்களுக்கான ஒழுக்க நெறி(media ethics) பற்றி குறிப்பிட்ட முதல் தருணமாக கொள்ளப்படுகிறது.
ஒருவருக்கு
இருக்கக்கூடிய பேச்சு சுதந்திரத்திற்கும் அதே வேளை பொறுப்புக்கும் இடையில் ஒரு
சமச்சீர்நிலையை ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அறிந்து செயற்படுவதற்கு உதவியாகதான் இந்த
விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
ஊடகவியலாளர்களுக்கு
அவர்களின் அன்றாட பணிகளின்போது அரசின் அல்லது அதிகார குழுக்களின் தலையீடு
இருகக்கூடாது என்ற எண்ண உந்துதலினால், ஊடகவியலாளர்கள்
ஊடக சங்கங்களின் ஊடக, ஒழுக்க நெறிமுறைகளை உருவாக்கி அதன் கீழ் தாம் செயற்படுவதை
உறுதிப்படுத்துகின்றனர். பல்வேறு நாடுகளும் இந்த வழிவகைகளை உருவாக்கியுள்ளன. தங்கள்
தங்கள் நாட்டிற்கு ஏற்ப இந்த நெறிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர். பல ஊடக நிறுவனங்கள்
தமக்கு தமக்கென தனியாகவும் உருவாகக்கியுள்ளன. தமது நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்
கட்டாயம் அதை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். உதாரணமாக BBC
யின் தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டும் நெறிகள் 360
பக்கங்களைக்கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
அதே
நேரம் உருவாக்கப்பட்ட ஊடக ஒழுக்க நெறியை ஒழுங்குபடுத்தவும் சுயகட்டுப்பாட்டு
அமைப்புகளையும் பல நாடுகள் ஏற்படுத்தியுள்ளன. அதனூடாக ஊடகவியலாளர்கள் தமது செய்தி
பணியில் எப்படி ஈடுபடவேண்டும் என்று “ஒழுக்க
நெறி’ கூறுகிறதோ அதை மீறுகின்றபோது பாதிக்கப்பட்டவர்கள், புகார்
அளித்து தீர்வுகாணக்கூடிய பொறிமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று உருவாகியுள்ள
புதிய தொழில்நுட்பத்தின் ஊடனான நவீன பொதுஜன தொடர்பாடல் நாடுகடந்து உலகம்
தழுவியுள்ளது. அதனால் ‘Global media ethics’ என்ற
சிந்தனை மேலோங்கியுள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நம் நாடுகளில்
ஒழுக்கக் கோவை ஒன்று ஊடகவியலாளா்களுக் இருக்கின்றது என்பதே பலருக்கு
தெரியாதுள்ளது. அப்படி தெரிந்தவர்களும் அதை ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு
விதிக்கும் கட்டுப்பாடாகவே எண்ணுகின்றனர். இந்த ஒழுக்க நெறிகள் எதன் அடிப்படையில்
உருவாக்கப்படுகிறது என்று
அறிந்து கொண்டால் அது ஊடகவியலாளர்களுக்கு ,அவர்களின்
தொழில்வாண்மைக்கு எவ்வளவு தூரம் உதவியகாகவுள்ளது என புரிந்து கொள்ளலாம்.
ஒழுக்க
நெறியின் அடிப்படைகள். நாட்டுக்கு நாடு வேறுபடான ஒழுக்க நெறிகள்
உருவாக்கப்பட்டாலும் பொதுவாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான அடிப்படைகள்
சில உள்ளன.
1. உண்மை, துல்லியம்
(Truth and Accuracy)
2. நியாயம் (Fairness)
3. தீங்கிழைப்பதைக் குறைத்தல் (Minimize Harm)
4. சுதந்திரம் (Independence)
5. பொறுப்புக்கூறல் (Accountability)
என்பனவே அவை.இவை குறிப்பிடுபவை,
2. நியாயம் (Fairness)
3. தீங்கிழைப்பதைக் குறைத்தல் (Minimize Harm)
4. சுதந்திரம் (Independence)
5. பொறுப்புக்கூறல் (Accountability)
என்பனவே அவை.இவை குறிப்பிடுபவை,
• ஊடகவியலாளர்கள்
உண்மைகளை மட்டுமே செய்திகளாக
வெளியிடவேண்டும். பொய்களை அல்ல.
• பிரசுரிக்கும் அல்லது ஒளிபரப்புமுன் அவர்கள் தங்களது தகவல்கள் சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
• செய்யும் தவறுகளை அவர்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள வேண்டும்.
• தகவல்களையும், அபிப்பிராயங்களையும் அவர்கள் ஒன்ற சேர்க்கக்கூடாது.
• பொது மக்களிடையே பாகுபாடு காணுமாறு செய்திகளை வெளியிடக்கூடாது.
• தகவல்களை சேகரிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நேர்மையானதாக இருக்க வேண்டும்.ஏமாற்று வழியில் தகவல் சேகரிக்கும் முறைகள் அசாதாரண நிகழ்வுகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
என்பவற்றையேயாகும். இலங்கையில் உருவாக்கப்பட்ட ஊடக ஒழுக்க நெறியும் இவற்றை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
• பிரசுரிக்கும் அல்லது ஒளிபரப்புமுன் அவர்கள் தங்களது தகவல்கள் சரியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
• செய்யும் தவறுகளை அவர்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள வேண்டும்.
• தகவல்களையும், அபிப்பிராயங்களையும் அவர்கள் ஒன்ற சேர்க்கக்கூடாது.
• பொது மக்களிடையே பாகுபாடு காணுமாறு செய்திகளை வெளியிடக்கூடாது.
• தகவல்களை சேகரிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நேர்மையானதாக இருக்க வேண்டும்.ஏமாற்று வழியில் தகவல் சேகரிக்கும் முறைகள் அசாதாரண நிகழ்வுகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
என்பவற்றையேயாகும். இலங்கையில் உருவாக்கப்பட்ட ஊடக ஒழுக்க நெறியும் இவற்றை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை
ஊடக ஒழுக நெறி பற்றிய அறிமுகம்.
இலங்கையில்
ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சினால்( Ministry of Mass Media and
Information). 1973 இல் கொண்டுவரப்பட்ட இலங்கை
பத்திரிகைப் பேரவை சட்டம் (Sri Lankan Press Council Act) இல.
05 படி சட்டரீதியானது. இதில் பகுதி 30 என்ற
பிரிவு 1981 இல் வர்த்தமானி அறிவித்தலினூடாக
ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்க நெறியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அது நடைமுறையில் ‘சட்டத்துக்கு
ஒப்பானதாக’ இருந்ததால் ஊடகவியலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள
வேண்டியிருந்தது. ஒழுக்க நெறி என்பவற்றின் கீழ் கூறப்பட்ட விடயங்களை மீறும்
ஊடகவியலாளர்கள் தண்டனை பெறும் அபாயம் உருவாகிற்று. மற்றும் இது அரசின் கீழ் இருப்பதால்
சுதந்திரம் தொடர்பான ஐயங்களும் உருவாகின. தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்
சுதத்திரத்திற்கும் இலங்கை பத்திரிகை பேரவை சட்டம் கட்டுப்பாடுகளை
விதித்திருந்தது. உண்மையில் ஒழுக்க நியமம் என்பது சட்டம் அல்ல. சட்டம் என்பது வேறு
ஒழுக்க நியமம் என்பது வேறு. இந்த வருடத்திலும் (2013) அரசு
தன்னால் உருவாக்கப்பட்ட ஒழுக்க கோவையை நடைமுறைப்படுத் முயன்றது. கைகூடவில்ல.
இந்த
நிலைகளை உள்வாங்கிய ஊடக அமைப்புகள் ‘கொழும்பு
பிரகடனம் 1998 ‘(‘The Colombo Declaration of 1998)’ முன்வைத்தது.
இதில் இலங்கை (Sri Lanka Working Journalists’ Association), சுதந்திர
ஊடக இயக்கம்’(The Free Media Movement) பத்திரிகை
ஆசிரியர் சங்கம், (The Editors Guild of Sri Lanka) பத்திரிகை
நிர்வாகிகள் ஒன்றியம் (The Newspaper Association of Sri Lanka) ஆகியவை
உலக பத்திரிகைகளின் ஒன்றியம்(World Association of Newspapers) மற்றும்
மாற்றுக்கொள்கைகள் மையம் ( The Centre for Policy Alternatives, )அமைப்புகளுடன்
இணைந்து செயல்பட்டன. அதில் 13 ஆவது
பிரிவு ஊடக நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் பொறுப்புகள் – சுய
ஒழுக்க விதிகள்(‘Responsibilities of Media Institutions and Personnel - Voluntary
Code of Ethics’ என்ற தலைப்பில்
1. உண்மை
துல்லியம்(Truth and accuracy)
2. நடுநிலைமை(Balance
)
3. உணர்வுபூர்வமான
பிரச்சினைகளைக் கையாளுதல்(Handling sensitivity issues )
4. தனிப்பட்ட
(Privacy )
5பதிலளிப்பதற்கான
சந்தர்ப்பம் (.Right to replay )
போன்றவற்றை
முக்கியப்படுத்தி ஊடக ஒழுக்க நெறி ஒன்றை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை
சுட்டிக்காட்டியிருந்தது. அதன் அடிப்படையில் இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கம்
தொழில் வாண்மைமிக்கோரின் நடைமுறைக்கோவை (ஒழுக்கக் கோவை) –
(‘Code of Professional Practice (Code of Ethics)) – ஒன்றைத்
தயாரித்தது. அதே நேரம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற அமைப்பும் நிறுவப்பட்டது.(SLPI).
இந்த ஒழுக்க போவையை நடைமுறைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் 2003
இல் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் (The
Press Complaints Commission of Sri Lanka (PCCSL) உருவாக்கப்பட்டது.
இது பத்திரிகை ஸ்தானத்தின் கீழேயே இயங்கியது. அதே நேரம் பத்திரிகையாளர்களுக்கான
பயிற்சிகளுக்காக “இலங்கை ஊடகவியல் கல்லூரியும் உருவாக்கப்பட்டது. ஒழுக்கக்
கோவையை மீறுகின்ற ஊடகவியலாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு
எதிராக பொதுமக்கள் புகார் அளித்தலை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு
உற்சாகப்படுத்தியது. அதே நேரம் ஊடகவியலாளர்களுக்கு ஊடக ஒழுக்கக் கோவையை பின்பற்ற
வேண்டியதன் அவசியத்தையும் உணர்தியது. இந்த ‘ஊடக
ஒழுக்கக் கோவை காலத்துக்கு காலம் மீளாக்கம் பெறும் உரிமையையும் கொண்டிருந்தது. அதற்கான
குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த
ஒழுக்க கோவை தனிநபர் உரிமைகளை மதிக்கும் அதேவேளை பொதுமக்களுக்கான தகவல் அறிந்து
கொள்ளும் உரிமையையும் மனதில் கொண்டுள்ளது.
இலங்கை
ஊடக ஒழுக்க நெறி பொதுமக்கள் ஆர்வம் கருதி தனிநபர்களின் தனிப்பட்ட விடயங்களை
செய்தியாக்குகின்ற போக்கையும் எப்படி கையாள்வது என விபரிக்கிறது, ‘பொதுமக்கள்
ஆர்வம்’ என்பது ‘பொதுமக்கள்
நலன்’ அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட
விடயங்கள் பெருமளவில் பொதுமக்களைப்பாதிக்கின்றபோதூதான் அதை வெளிக்கொண்டுவரலாம். இன்று
நவீன ஊடகங்கள் பல இதுபற்றிய கரிசனையே இல்லாது
தனிப்பட் மனிதர்களை அசௌகரியப்படுத்துவதும் அவதூறு செய்வதும் ஊடக செயற்பாடு என
எண்ணுகிறது. சமூக ஊடகங்கள் என்ற சொல்லப்படும் முகப்புத்தகம், வலைப்பூக்கள்,டுவிட்டர் போன்றன மக்களை மையப்படுத்திய
ஊடகங்கள். இவை ஒழுங்க நியமங்களைக்
கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் வெகுசனங்களுக்கான கருத்துக்ளை முன்வைப்பதில்
குறைந்த பட்சம் பொய்களையாவது தவிர்க்கலாம். ஒழுக்க போவையின், பத்திரிகா
தர்மத்தின் முதல் வாசகம் ‘உண்மை”
ஊடகவியலாளர்கள்
99.5 வீதம் உண்மையான செய்திகளை
பிரசுரிக் முடியரது. 100 வீதம் உண்மையானதாக செய்தி இருக்க
வேண்டும். இலங்கையில் 2006 பெப்ரவரி 1ஆம்
திகதி ஒரு செய்தி வந்தது.
உ+ம்
:பத்திரிகை 1.திருகோண மலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
பத்திரிகை 2.திருகோணமலையில்
ஐந்து புலிகள் கொல்லப்பட்டனர்.
இதில்
எது சரி? எது பிழை? இதில்
ஒரு பத்திரிகை உண்மையை எழுதவில்லை என்பது தெளிவு.இந்த பிரச்சினையின் உண்மையைக் கண்டறிய
இன்றுவரை வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மையை
உறுதிப்படுத்த எப்போதும் செய்தி முலங்கள் (news sources முக்கியமானவை.
வெளிப்படையான செய்தி மூலங்கள் எப்போதும் ஊடகவியலாளர்களின் செய்திகளை நம்பகத்தன்மை
கொண்டதாக்கும். தவிர்க முடியாத சந்தர்பபங்களில் மட்டும் செய்தி மூலங்கள்
மறைக்கப்படலாம்.
துல்லியம்
( Accuracy). என்பது மிகச்சரியாக அறிக்கையிடல். பெயர்கள், இடங்கள், பதவி
நிலைகள், தொகைகள் என்பன செய்திகளில்
கையாளப்படும் போது அவை மிகச்சரியாக இருக்கின்றனவா என மீண்டும் மீண்டும் பரிசோதித்துக்கொள்ளல்.
1.நியாயம்
ஊடகவியலாளர்கள் செய்தி அளிக்கையில் நேர்மையாக நியாயமாக இருக் வேண்டும். செய்தி
வெளியிடும்போது பக்கம் சாராமல் நடுநிலையில் இருத்தல்.ஒருபக்க கருத்தை மட்டும்
பிரசுரிக்காமல் மறுபகுதியினருக்கும் பதிலளிக்கும் சுதந்திரத்தை கொடுத்து நடுநிலை
பேணுதல்.
. அடுத்தது தகவலை பெறும் போதும் (Obtaining Material ) தவறான முறைகளிலும் ஊடகவியலாளர்களை வெளிக்காட்டாமலும் பெறுதல்.(பொதுமக்கள் நலன் கருதி இது மீறப்படலாம்.) இலங்கையில் 2008 ஜூன் 26இல் வெளிவந்த ஒரு செய்தி பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில்
எட்டு புலிகள் நோர்வேக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அடுத்த
நாள் வேறு ஒரு பத்திரிகையில் எட்டு
புலிகளை டென்மார்க்குக்கு அனுப்பதியதாக பத்திரிகை ஸ்தாபனம் மீது தவறான குற்றச்சாட்டு சட்ட நடவடிக்கை
எடுக்க போவதாக அறிவிப்பு முதல்
செய்தியை வெளியிட் பத்திரிகையாளர் நேர்மையாக நடக்கவில்லை என்பது தெளிவு. பதிலளிக்கும்
சுதந்திரத்தையும் பாதிக்கப்ட்ட தரப்புக்கு அவர்கள் வழங்கவில்லை.
2. தீங்கிழைப்பதைக்க குறைத்தல் Minimize Harm
பொது மக்களின் ஆர்வத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் உணர்வுபூர்வமான செய்திகளை வெளியிடுவர். அதில் பாதிக்கப்பட்ட நபர் மேலும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் செய்திகளை வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும். தற்கொலைகள் பாலியல் வல்லுறவு சமபவங்கள், வேறுபட்ட சமூகங்கள் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகள் போன்றவற்றை அறிக்கையிடும்போது சமூகப்பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மற்றும் சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பிலும் விடயங்களை கையாள வேண்டும்.
பொது மக்களின் ஆர்வத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் உணர்வுபூர்வமான செய்திகளை வெளியிடுவர். அதில் பாதிக்கப்பட்ட நபர் மேலும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் செய்திகளை வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும். தற்கொலைகள் பாலியல் வல்லுறவு சமபவங்கள், வேறுபட்ட சமூகங்கள் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகள் போன்றவற்றை அறிக்கையிடும்போது சமூகப்பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மற்றும் சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பிலும் விடயங்களை கையாள வேண்டும்.
3. சுதந்திரம் Independence
ஊடகவியலாளர் கள் தமது ஊடகச் செயற்பாட்டின்போது தமது சுதந்திரத்திற்க பங்கம் விளைவிப்பன இவை என எவற்றை இனங்கண்டாலும் அவற்றில் இருந்து விலகியிருத்தல் வேண்டும். அரசியல் தலையீடு, பணம், ஊழல், நிறுவன இலாபம், பரிசுப்பொருள்கள் ,சுய விருப்பு, ஆர்வம் போன்றவையும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடியவை என IFJ சுட்டிக்காட்டுகிறது.
4. பொறுப்புக்கூறல் Accountability
ஊடகவியலாளர்கள் யாருக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள்? மக்களின் குரலாக ஜனநாயகத்தின் குரலாக ஊடகவியலாளர்கள் ஒலித்துக்கொண்டிருக்தகிறார்கள் என்கிறோம். இதனால் சமூகத்தின் நம்பிக்கைகக்குரியவர்களாகின்றனர். மக்களின் தகவல் பெறும் உரிமைக்கு பாத்திரமானவர்களாகின்றனர். எனவே நாட்டின் சட்டத்திற்கு மக்களுக்கு ,ஊடக குழாத்திற்கு, தனக்கு என எல்லேரருக்குமே பொறுப்புக் கூற வேண்டியவர்களாகின்றனர்.
இந்த
விடயங்களின் அடிப்படையில் இலங்கை ஊடக ஒழுக் நெறி உருவாக்கப்பட்டுள்ளது. இவை
எவ்வாறு ஊடகவியலாளரின் சுதந்திரத்தை பாதிக்கும்? மாறாக
ஊடகத் தொழிலுக்கு கௌரவத்தையையும் பாதுகாப்பையும் தான் இவை வழங்கும்.
எம்.எஸ்.தேவகெளரி