ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கு புத்தளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எஸ்.ஆர்.எம்.எம்.ஆசாத் என்பவரின் நோர்த் ரோட் பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலினால் அவரின் வீட்டு ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்,அவரது 6 வயது நிரம்பிய குழந்தையொன்றும் வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 3.00 மணியளவில் உறக்கத்தில் இருந்த போது வீட்டின் கண்ணாடிகள் கடும் சத்தத்துடன் நொருங்குவதையடுத்து,ஆஷாத் சத்தமிட்டுள்ளார்.அப்போது வீட்டின் பிரதான கதவு மூடப்பட்டிருந்த நிலையில் மதில் சுவரால் பாய்ந்து சிலர் ஓடுவதை ஆசாத் அவதானித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தேர்தல் அமைதியாக வண்முறைகளற்ற முறையில் நடந்து முடிந்துள்ள நிலையில் புத்தளத்தில் இவ்வாறான சொத்துக்களுக்கு சேதம் விளைப்பது தொடர்பில் பொலீஸார் கடும் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாக புத்தளம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நன்றி சோனகா்.கொம்..

