Sunday, June 28, 2015

ஓரினச் சேர்க்கை திருமணம்: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

நியூயார்க்: ஓரினச் சேர்க்கையாளர்கள்  திருமணத்துக்கு அனுமதி வழங்கி அமெரிக்க உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதன் மூலம், அங்குள்ள 50 மாகாணங்களில், ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாகி விடும். இது தொடர்பாக, நீதிபதி ஆண்டனி கென்னடி பிறப்பித்துள்ள உத்தரவில், " சட்டத்தின் முன்பாக தங்களுக்குக் கண்ணியமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஓரின சேர்க்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 



அவர்களுக்கு, அரசியலமைப்பு சட்டம் அத்தகைய உரிமையை வழங்குகிறது"  என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவுக்கு முன்பாக,  அமெரிக்காவின் 13 மாகாணங்களில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments