Sunday, June 28, 2015

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு பான்-கி-மூன் வரவேற்பு!


நியூயார்க்: ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய தடையில்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.


அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ தடை இல்லை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர், ''இந்த தீர்ப்பின் மூலம் அமெரிக்கா, மனித உரிமையை காப்பதில் மேலும் ஒருபடி முன்னோக்கி நகர்ந்துள்ளதை காட்டுகிறது. நாட்டின் ஒரு பகுதியில் ஓரினச்சேர்க்கை அனுமதிக்கப்படும்போது, ஏன் பிறப்பகுதியில் அனுமதிக்க கூடாது என்ற நியாயமான கேள்வியை ஏற்று நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.



இதன் மூலம் அமெரிக்காவில் மனித உரிமை நிரூபிக்கப்பட்டு உள்ளது" என்று கூறி உள்ளார்
Disqus Comments