Sunday, June 28, 2015

தன்னினச் சோ்க்கையைக் கொண்டாடும் OBAMA, WHITEHOUSE, FACEBOOK & முஸ்லிம் இளைஞா்கள்.

கடந்த இரு தினங்களாக அதாவது 26.06.2015க்கு பிறகு பேஸ்புக்கில் facebook.com/celebratepride  என்னும் லிங்யிற்கு சென்று தங்களது Profile படங்களை வானவில் நிறங்களுக்கு அமைய மாற்றிக் கொண்டு இருக்கின்றனா். முகநூலில் எது வருகிறதோ அதை Fashion என்றும் New Trend என்றும் கருதி எமது முஸ்லிம் சமுதாயம் வழிகெட்டுச் செல்வது இன்று 100 க்கு 95 வீதத்துக்கு மேல் காணப்படுகின்றது என்றால் அது மிகையல்ல.
Celebrate Pride க்கான காரணம் என்ன?
26-06-2015 அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத முக்கியமான நாள். அவா்களது கருத்துப்படி பொன் எழுத்துக்களால் பெறிக்கப்பட வேண்டி நாள். அது நாள் ஒருபால் திருமணம் சட்டரீதியாக உயா் நீதிமன்றத்தால் முழு அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட நாள். முழு அமெரிக்காவும் இதனைக் ஒரு கொண்டாட்டமாக எடுத்துக் கொண்டது.

அமெரிக்க அதிபா் ஒபாமா
2012 முதல் அமெரிக்காவின் ஜனாதிபதியான பராக் ஒபாமாவும் ஒருபால் திருமணத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து வருகின்றார்.
அந்த வரிசையில் ஒரு பால் திருமணம் முழு அமெரிக்காவில் சட்டமாக்கப்பட்டதைத் தொடா்ந்து அமெரிக்கா அதிபா் தனது டுவிட்டா் பக்கத்தில் பின்வருமாறு "today is a big step in our march toward equality. Gay and lesbian couples now have the right to marry, just like anyone else." தெரிவித்துள்ளார். அதில் அவா்கள் ஆண் தன்னினச் சோ்க்கையாளா்களும், பெண் தன்னினச் சோ்க்கையாளா்களும் சாதாரண ஆண், பெண்கள் போல் திருமணம் செய்து கொள்ள சமத்துவ உரிமை பெற்றுள்ளா்கள் என்பதை வலியுறுத்தியுள்ளார்.


வெள்ளை மாளிகையிலும் கொண்டாடப்பட்ட ஒரு பால் திருணச் சட்டம்.
மேற்படி சட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து முழு அமெரிக்காவிலும் கொண்டாடப்பட்டதைப் போல் வெள்ளைமாளிகையிலும் அலங்கார விளக்குகளினால் ஆன கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இவற்றினைப் பிரதிபலிக்கும் படங்களை எம்மால் இணையத்தில் கண்டு கொள்ள முடிகின்றது.


தன்னினச் சோ்க்கையைக் கொண்டாடிய FACEBOOK ஸ்தாபகா்.

அனைவரையும் போன்று FACEBOOK ஸ்தாபகா் மார்க்வும் தன்னினச் சோ்க்கை சட்டத்தை வரவேற்று கொண்டாடியது மட்டுமல்லாமல் தனது முகநூல் பக்கத்தில் அது தொடா்பான தனது கருத்துக்களை வெளியிட்டார். அவா்கள் முகநூலில் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு
Our country was founded on the promise that all people are created equal, and today we took another step towards achieving that promise.
I’m so happy for all of my friends and everyone in our community who can finally celebrate their love and be recognized as equal couples under the law.
We still have much more to do to achieve full equality for everyone in our community, but we are moving in the right direction.”
தன்னினச் சோ்க்கையை சட்டபூா்வமாக்கப்பட்டதை கொண்டாடும் எமது சமூகத்தில் உள்ள அனைத்து எனது நண்பா்களையிட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் நாங்கள் நேரான பாதையில் தான் நகா்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று தன்னினச் சோ்க்கைக் பச்கை கொடி காட்டியிருக்கின்றார்.

தான் கொண்டாடியது மட்டுமல்லாது இந்த உலகத்தில் உள்ள அனைவரும் அதாவது FACEBOOK பயன்படுத்தும் அனைவரும் இந்த தன்னிச்சோ்க்கை சட்டத்தைக் கொண்டாட வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்படதே இந்த facebook.com/celebratepride எனும் trend தான் தாங்கள் இப்போது அமைத்துள்ள பேஸ்புல் PROFILE படத்தை வானவில்லின் நிறத்திற்கு மாற்றுவது. அதனைத் தான் எமது இஸ்லாமிய சொந்தங்களும் செய்து கொண்டு இருக்கின்றனா்.

குறிப்பாக ஏன் வானவில்லின் நிறம் பாவிக்கப்படுகின்றது.?
உலகில் உள்ள தன்னினச் சோ்க்கையாளா்கள் (ஆண்கள், பெண்கள்) ஒரு அமைப்பாக செயற்படுகின்றார்கள். அவா்கள் ஆங்கிலத்தில் LGBT Community என்பதாக அழைக்கப்படுகின்றா்கள்.
L - Lesbianபெண் தன்னினச் சோ்க்கையாளா்.
G- gayஆண் தன்னினச் சோ்க்கையாளா்கள்.
B- bisexual இருபால் சோ்க்கையளா்கள்.
T- transgender  - திருநங்களைகள்.

இவங்களது சங்கத்தின் Logo தான் வானவில்லின் ஏழு நிறங்களைக் கொண்ட கொடி. LGBT Community தொடா்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவா்கள் அமெரிக்காவை தளமாக கொண்டு LGBT Community இயங்கும் யின் இணைய தளத்தை நாடுங்கள்.
இணைய தள முகவரி https://gaycenter.org

LGBT COMMUNITY தொடா்பாக FACEBOOKயில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்தாபகா்



எதிர்காலத்தில் முஸ்லிம்கள் யூதா்களையும், கிறிஸ்தவா்களையும் கண்மூடித் தனமாக பின்பற்றுவார்கள். அந்தப் பின்பற்றுதல் எவ்வாறு இருக்கும் என்று நபி (ஸல்) அவா்கள் 1400 வருடங்களுக்கு முன்பே கட்டியம் கூறி விட்டார்கள்.

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
'
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள் (புகாரி – 7320, 3456 மற்றும் முஸ்லிம் – 5184)

எங்கு நாம் எதைக் கண்டாலும் அதனை நாம் என்வென்று அறிந்து தெரிந்து பின்பற்றுவது தான் ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க முடியும். மேற்படி தவறைச் செய்த நண்பா்கள் அதை நீக்கிக் கொள்வது தான் முஸ்லிம்களாகிய எமக்கும் நாம் இப்போது இருக்கும் புனி ரமழான் மாதத்திற்கும் நாம் செய்து கண்ணிமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.









Disqus Comments