Saturday, July 25, 2015

நான் ஏன் ஒரு மாத்தில் இருகட்சி மாறினேன். M.H.M. நவவி தன்னிலை விளக்கம்.

(நேற்று ஜும்ஆத் தொழுகையின் பின்னா் வெளிளிடப்பட்ட துண்டுப் பிரசுரம்) 
அன்பார்ந்த  வாக்காள பெரு மக்களே,

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த முறை நடைபெற உள்ள பொது தேர்தலில் M.H.M. நவவி ஆகிய நான் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றேன் என்பதை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றேன். கடந்த காலங்களில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்ட நான் ஏன் அந்த கட்சியை விட்டு வெளியேறினேன் ? முஸ்லிம் காங்கிரசில் இணைந்து சிறிது காலத்தில் ஏன் வெளியேறினேன் ? உண்மையில் என்ன நடந்தது என்ற பல்வேறு கேள்விகள் சமூகத்தில் பரவலாக கதைக்கபடுவதனை எனது ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து  கொண்டு அவற்றுக்கு விடை அளிக்கும் முக்கிய துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட தீர்மானித்தேன்.

  1. நான் ஏன் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறினேன் ?

சுமார் நாற்பது வருட காலமாக சிறிலங்கா சுதந்திர கட்சியில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொண்ட நான் 2007 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் எந்த வித  முன் அறிவிப்பும் கிடைக்க பெறாது அமைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றப் பட்டேன். இருந்தாலும் எனக்கு உரிய ஏதாவது பதவிகள் வழங்கப் படும் என்று காத்திருந்த எனக்கு இறுதியில் ஏமாற்றமே மிச்சம். இவ்வாறு கட்சிக்காக பல்வேறு சேவைகளை செய்த என்னை கட்சியின் மேலிடம் கண்டுகொள்ளாததால் அந்த கட்சியியை விட்டு வெளியேறினேன். அரசியல் தொடர்பில் பல்வேறு அழைப்புக்கள் கிடைக்க பெற்றும் பொறுமையினை கையாண்டேன்.

02 .சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டு அதில் இருந்து வெளியேறியது ஏன் ?
கடந்த 06 பொது தேர்தல்களில் 05 பொது தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்ட அனுபவம் எனக்கு உண்டு (1989, 1994, 2000, 2001, 2004). ஆனால் எந்த தேர்தலிலும் நான் உட்பட எந்த ஒரு சிறுபான்மை வேட்பாளரும் தேசிய கட்சிகளில் வெற்றி பெற்ற வரலாறு இல்லை. இதனை நன்கு தெரிந்த ஒரு அரசியல் வாதி புத்தளத்தில் என்னை தவிர வேறு யாரும் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதனாலேயே தேசிய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என தெரிந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இனைய தீர்மானித்தேன். அந்த கட்சியின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்வது இலகுவானது என்பதை கணித ரீதியில் நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன். கடந்த மாகான சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கைப்பற்றியது மேலும் இதற்கு ஒரு அத்தாட்சி.  ஆனால் கடைசி நேரம் வரை மரச் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி கூறி ஐக்கிய தேசிய கட்சி ஊடாக யானை சின்னத்தில் போட்டியிட போவாதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் கூறியதை இட்டு அந்த கட்சியினை விட்டு வெளியேறினேன். யானை சின்னத்தில் நஸ்மி அவர்கள் மாத்திரமே போட்டியிட இருந்தார். அதனால் இரண்டாவது தெரிவாக என்னை தெரிவு செய்தும் நான் அதனை நிராகரித்து விட்டு அந்த கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் வரை மரச் சின்னத்தில் போட்டியிடுவோம், வெற்றி பெறுவோம் என எனக்கு புத்தளம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எனக்கு  அமோக உற்சாகம் வழங்கினார்கள். அவர்களை இந்த விடயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்தில் தனித்து  மர சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் அவர்கள் விடாப் பிடியாக இருந்தனர். ஆனால் கட்சியின் மேலிடத்து தீர்மானத்துக்கு அவர்களால் பதில் கூற முடியாது போனது.  ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்தில் யானை சின்னத்தில் போட்டியிட போவது என்ற செய்தி பல நாட்களுக்கு முன்பே உறுதியாகிய விடயம் பின்னரே எனக்கு தெரிய வந்தது. ஆனால் நோன்பு காலம் என்றும் பாராமல் நாங்கள் புத்தளம் கொழும்பு என்று சுற்றி திரிந்தது மட்டுமே கடைசியில் எஞ்சியது.
  1. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக யானை சின்னத்தில் போட்டியிடாது ஏன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றேன் ?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மேல் கொண்ட அதிருப்தியின் காரணமாக அந்த கட்சியில் தனித்து போட்டியிட முடியாது என தெரிந்து கொண்ட என்னை சந்திக்க முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் அந்த இரவே எனது இல்லத்துக்கு வந்தார். என்னை ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறினார். அதனை முதலில் மறுத்த எனக்கு இந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும் தேசிய பட்டியல் மூலம் எனக்கு இரண்டரை வருடங்கள் தருவதாக வாக்குறுதி அளித்தார். அவரின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை ஊட்டியது. இது வரை காலமும் சந்திரிக்கா, மஹிந்த ஆகியோரின் வாக்குறுதிகளை விட முஸ்லிம் தலைமை ஒருவரின் வாக்குறுதிகள் நம்பிக்கையினை வளர்த்தது. இதற்க்கு பொறியியலாளர் ஜிப்ரி, சிபாக் ஆசிரியர் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் சாட்சியாக உள்ளனர். அது மட்டுமில்லாது இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றிலேயே இல்லாதவாறு புத்தளம் மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த முறை வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் ரிசாத் தனிப்பட்ட ரீதியில் எனக்கு கூறினார். இதனாலேயே நான் அவருடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தேன்.

  1. PPAF குழுவில் இணைந்து போட்டியிடாமைக்கான காரணம் என்ன ?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மரச் சின்னத்தில் இணைந்தே நாங்கள் PPAF உடன் போட்டியிட தீர்மானித்தோம். அந்த அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் PPAF ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் காணப்பட்டது. நான் முதலில் முஸ்லிம் காங்கிரசிலேயே இணைந்து போட்டியிட தீர்மானித்தேன். மாறாக நான் PPAF இல் இணைந்து சுயேட்சை குழுவில் போட்டியிடுவேன் என நேரடியாக யாருக்கும் குறிப்பிடவில்லை. PPAF குழுவிற்கு கூட நான் முஸ்லிம் காங்கிரசிலேயே இணைந்து உள்ளதை பற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். இறுதி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டியிட சென்றமையினால் அனைத்து ஒப்பந்தங்களும் கைநழுவி சென்றது.
  1. தேசிய பட்டியல் கிடக்கும் என்றால் நான் ஏன் தேர்தலில் களமிறங்க வேண்டும் ? போட்டியிடாமல் இருந்தாலும் தேசிய பட்டியல் கிடைக்கும் தானே ?
புத்தள வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சியின் 11 பேர் கொண்ட வேட்பு மனு பட்டியலில் முதன் முதலாக 03 முஸ்லிம்கள போட்டியிட சந்தர்ப்பம் ஒன்று கிட்டியுள்ளது. முன்னைய காலங்களில் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு கிடைத்த இரண்டாவது அல்லது மூன்றாவது மணாப்பே இந்த முறை வெளியில் செல்வது கணிசமாக குறைக்க படுகின்றது. இதனால் சென்ற 2010 பொது தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மூன்று முஸ்லிம்களும் ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்று சென்றமையை போன்று இம்முறை புத்தள மாவட்டத்தில் மூன்று முஸ்லிம்கள் வெற்றி பெற நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன் படுத்த வேண்டியது நமது கடமையாக உள்ளது. இவ்வாறு நான் வெற்றி பெற்றால் முஸ்லிம் பிரதிநித்துத்துவத்தை பாராளுமன்றத்தில் அதிகரித்து கொள்ள முடியும் என்பதாலேயே நான் களத்தில் போட்டியிட உள்ளேன். நான் வெற்றி பெற்று சென்றால், அந்த தேசிய பட்டியல் மூலம் இன்னொரு முஸ்லிம் பிரதிநித்துவம் கிடைக்க பெரும். எனவே முதலில் வெற்றி பெற தேவையான விடயங்களை செய்ய வேண்டும்.

  1. ரிசாத் பதியுதீன் அவர்களின் புகைப்படத்தை போடாமல் எனது போஸ்டர், பெணர் ஆகியவற்றை விளம்பர படுத்துவது ஏன் ?
கடந்த காலங்களில் வில்பத்து பிரச்சினையின் விளைவாக சிங்கள மக்களின் மத்தியில் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு தப்பான ஒரு பார்வை உள்ளதால் அவரின் படங்களை பிரசுரித்து அசௌகரியங்கள் ஏற்படாமல் இருக்கவே அவரின் புகைப்படங்களை எனது போஸ்டர் மற்றும் பேனர்களில் பிரசுரீப்பதை தவிர்த்து கொண்டேன். இதில் எந்த வித மாற்று கருத்துக்களும் கிடையாது. எந்த வித உள் நோக்கங்களும் இல்லை.
  1. இருபது இலட்சம் வாங்கிவிட்டு நான் ஊரை காட்டி கொடுத்துவிட்டதாக என்னை பற்றி தவறான கருத்து ஒன்று பரவுகிறது. இது உண்மையா ?
ஆரம்ப காலம் முதல் எனது சொந்த சொந்துக்களை விற்று அரசியல் செய்தவன் நான். அரசியலில் இது வரை ஹராமாக எந்த வகையிலும் நான் உழைக்க முயற்சி செய்யவில்லை. இருபது இலட்சம் ரூபா வாங்கிவிட்டு அதனை வைத்து அரசியல் செய்ய வேண்டிய எந்த தேவையும் எனக்கில்லை. என்னுடைய மைத்துனர் அவர்கள் (கலர்கோர்ன் உரிமையாளர் ) இதனை விட அதிக பணத்தை எனக்காக தேர்தலில் செலவழிக்க காத்திருக்கின்றார். வீண் பழி சுமத்தி என் மீது சேறு பூசுபவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும். 

  1. பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என தெரிந்தும் ஏன் அந்த கட்சியில் போட்டியிடுகின்றேன் ?
நான் மேலே கூறியதை போல பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என அதிக அனுபவம் கொண்டவன் நான் மட்டுமே. ஆனால் இந்த முறை வரை முதல் முறையாக ஐக்கிய தேசிய கட்சியில் மூன்று முஸ்லிம்கள் போட்டியிடுவதால் இம்முறை முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே சரியாக பயன்படுத்தி வெற்றி பெற முடியும். இம்முறை ஐக்கிய தேசிய கட்சி புத்தள மாவட்டத்தில் வெற்றி பெற்றால் 05 ஆசனங்களை கைப்பற்றும். அந்த அடிப்படையில் இம்முறை முஸ்லிம் வாக்குகள் மூன்று முஸ்லிம்களுக்கும் சரியாக கிடைக்க பெற்றால் மூவரும் வெற்றி பெற கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அது மட்டுமில்லாது இம்முறை கடந்த காலங்களை போலல்லாது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு சரிக்கு சரியாக வாக்குகள் பிரிந்து செல்ல வாய்ப்புக்கள் இல்லை. முன்னைய காலங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து வந்தமையே நமக்கான பிரதிநிதி ஒருவர் கிடைக்க பெறாமைக்கான காரணாமாக இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் பெயரளவிலேயே நியமிக்க பட்டுள்ளார். எனவே முஸ்லிம்களின் வாக்குகளை சரியாக பயன்படுத்தினால் எமக்கான பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரை பெற்று கொள்வது இலகுவான ஒரு விடயம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனாலேயே நான் இம்முறை யானை சின்னத்தில் வெற்றி பெற முடியும் என நம்புகின்றேன்.
எனவே அன்பார்ந்த வாக்காள பெரு மக்களே,
அரசியலில் சுமார் நாற்பது வருட அரசியல் அனுபவத்தை கொண்ட எனக்கு இன்று புத்தள மாவட்டத்தில் உள்ள எல்லா முஸ்லிம் கிராமங்களிலும் அமோக வரவேற்பு கிடைப்பதை காண முடிகின்றது. எமது மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் வாக்குகளை மாத்திரம் வைத்து கொண்டே எமக்கான ஒரு முஸ்லிம் பிரதிநிதி ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. முஸ்லிம் வாக்குகள் நூற்றுக்கு நூறு வீதம் ஒரே சின்னத்துக்கு கிடைக்க போவது இதுவே எமது தேர்தல் வரலாற்றில் முதல் தடவை. எனவே சிந்தித்து உங்கள் வாக்குகளை பயன்படுத்தி எமக்கான பிரதிநிதி ஒன்றை வென்றெடுப்போம்.
Disqus Comments