Saturday, July 25, 2015

UNP 47 % UPFA 41% அரச புலனாய்வுதுறையினரின் கருத்துகணிப்பு வெளியானது

(நன்றி- மடவளை நியூஸ்) எதிர்வரும் பொதுதேர்தல் தொடர்பாக அரச புலனாய்வு துறையினர் நடத்திய கருத்து கணிப்பில் இலங்கையில் உள்ள தேர்தல் மாவட்டங்கள் இருபத்து இரண்டு தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி பத்து மாவட்டங்களில் வெற்றிபெறும் எனவும் சுதந்திர கூட்டமைப்பு ஒன்பது மாவட்டங்களிலும் தமிழ் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களிலும் வெற்றி பெரும் என தகவல வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு ,கண்டி,மாத்தளை, நுவரெலியா,புத்தளம்,பதுளை, பொலன்னறுவை , அம்பாரை,திருமலை, மாத்தறை ஆகிய  பத்து மாவட்டங்களை கைபற்றும் எனவும் தமிழ் கூட்டமைப்பு மட்டு,வன்னி,யாழ் ஆகிய மூன்று மாவட்டங்களையும் இதர ஒன்பது மாவட்டங்களை சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றும் தற்போதைய கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அரச புலனாய்வு துறையினர் நடத்திய கருத்து கணிப்பின் படி ஐக்கிய தேசிய கட்சி 47% வாக்கு வீதத்தையும் ஐ.ம.சு.கூ  41%வாக்கு வீதத்தையும் பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உள்ள நிலைமை தேர்தல் நெருங்கும் போது  ஐக்கிய தேசிய கட்சிக்கு மேலும் சாதகமாக அமையும் தெரிவிக்கப்படுகிறது..
Disqus Comments