Monday, October 19, 2015

சதொச மூலம் நுகர்வோர் பூரண பயனை பெற சிங்கப்பூர்னுடைய சில்லறை வர்த்தகதுறை மாதிரியை பின்பற்ற வர்த்தக அமைச்சர் உறுதி!

சதொச மூலம் நுகர்வோர் பூரண பயனை பெற சிங்கப்பூர்னுடைய சில்லறை வர்த்தகதுறை மாதிரியை பின்பற்ற வர்த்தக அமைச்சர் உறுதி!
 
இலங்கைச் சந்தையில் மிக முக்கியமான பொருட்களின் விலைகளை அறிவிக்கும் செயற்பாடுகளையுடய அரசுக்ககு சொந்தமான சதொச மலிவு விற்பனை நிலையத்தை விஸ்தரித்து நவீன மயப்படுத்தும் பணிகள்  முன்னெடுபப்பட்டு வருகின்றது. சதொசவை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் சிங்கப்பூர்னுடைய சில்லறை வர்த்தகதுறை மாதிரியினை பின்பற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கைத்தொழில் மற்றும் அமைச்சர் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார.;
 
விசேட மரியாதை அழைப்பொன்றின் நிமித்தம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்கு வருகை தந்த  வதிவிடவற்ற இலங்கைக்கான சிங்கப்பூர் உயர் ஸ்தானிகரும் சிங்கப்பூர்- சொங் பூன்னின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரா தாஸ் க்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் கூறியதாவது: 2014 ஆம் ஆண்டில் சர்வதேச இறக்குமதி வர்த்தகத்தில் 6.6மூ சத வீத பங்கினை வகிக்கும் இலங்கையின் மொத்த இறக்குமதியில் இறக்குமதிகளினை மேற்கொள்ளும் பிரதான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் உள்ளது.; 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களினை இலங்கை சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்கின்றது. பெற்ரோலிய எண்ணெய், பால் மற்றும் கிரீம்கள், உரங்கள், இரும்பு, உருக்கு மற்றும் பிளாஸ்டிக் ஆகிய உற்பத்தி பொருட்கள்  இறக்குமதி செய்யப்படுகின்றன. 300 க்கும் மேற்பட்ட் கடை தொகுதிகளை கொண்ட சதொச அரசுக்குச் சொந்தமான ஒரேயொரு சங்கிலி தொடர் சில்லறை கடை தொகுதியாக உள்ளது.  எனது அமைச்சின் கீழுள்ள சதொச இலங்கைச் சந்தையில் மிக முக்கியமான பொருட்களின் விலைகளை அறிவிக்கும் செயற்பாடுகளை கொண்டுள்ளது. நாம் தற்போது சதோச விற்பனை நிலையத்தை புதுப்பிப்பதற்கான  செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றோம். ஆனால் இன்னும் மாதாந்த இழப்புகளுக்கு முகம் கொடுக்கின்றோம். சதோசவை விஸ்தரித்து நவீன மயப்படுத்தி முன்னெடுப்பதற்கு சிங்கப்பூர்னுடைய சில்லறை வர்த்தகதுறை மாதிரியினை பின்பற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த விஷயத்தில் சிங்கப்பூர் எமக்கு  பூரண ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என்றார் அமைச்சர்.
 
வதிவிடவற்ற இலங்கைக்கான சிங்கப்பூர் உயர் ஸ்தானிகரும் சிங்கப்பூர்- சொங் பூன்னின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரா தாஸ் தெரிவிக்கையில:; சுகாதாரம், வீட்டு வசதி, கல்வி, கப்பல் துறை மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் நாம் உறுதியாய்  உள்ளோம்.  சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் - ‘நியாய விலை’ கடை தொகுதி மைய மாதிரியினை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் முன்மொழிகின்றேன். இந்த ‘நியாய விலை’ கடை தொகுதி மையத்தின் தலைவராக 33 வருடம் பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. அதனடிப்படையில் இவ்மாதிரியினை பின்பற்றுவது சிறந்தது என நான் நம்புகின்றேன். எமது ‘நியாய விலை’ கடை தொகுதி மையம் சர்வதேச தரத்தில் உள்ளது.
 
‘நியாய விலை’ ஒரு இலகு தள்ளுபடியுடன் போட்டியிடுகையில்;  பிரபல பிராண்டுகளின் சில்லறை தொகுதியை விட  10மூ  சத வீதம்  குறைந்த விலையினை கொண்டுள்ளது. ‘நியாய விலை’ 2014 ஆம் ஆண்டில் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயினை ஈட்டியுள்ளது.  நியாய விலையானது தொழிலாளர்களுக்கும்  தொழிற்சங்கங்களுக்கும் சொந்தமான மையமாகும். அதன் இலாபங்களானது பங்குகளை வாங்கும் சிங்கப்பூர் பிரஜைகளக்கு  வழங்கப்படும். இந்த வணிக செயற்பாடுகள் குறித்து எனக்கு நல்ல அனுபவம் இருக்கின்னது. ஆனால் சதோசவிற்கு எவ்விதமான மத்திய களஞ்சியம் இல்லை என்பதை நான் உணர்ந்துள்ளேன். நீங்கள் மத்திய களஞ்சியத்தினை  நிறுவ வேண்டும்!; சதொசவிலிருந்து ஒரு ஆய்வு குழுவினரை சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டும். சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் - ‘நியாய விலை’ கடை தொகுதி மைய பயிற்சிகளினை அவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளினை நான் மேற்;கொள்வேன். இது தொடர்பில் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கவும் என்றார் சந்திரா தாஸ்.
எம்மை  சிங்கப்பூரிற்கு விஜயம் செய்வதற்கு  அழைப்பை விடுத்தமைக்கு  வரவேற்கின்றேன் மற்றும் இவ்விஜயத்திற்கு  தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவுள்ளேன். என்றார் அமைச்சர் பதியுதீன்
சிங்கபூரின் ‘நியாய விலை’ கடை தொகுதி மையம் 1973 ஆம் ஆண்டில் தொழிலாளர் இயக்கத்தினால் நிறுவப்பட்டது முதல் இன்று 2000 க்கும் மேற்பட்ட வீட்டு பாவனைப் பொருட்களினை சிங்கப்பூர் முழுவதும்; உள்ள 120 ‘நியாய விலை’ கடை தொகுதி மையங்கள்  ஊடாக தினசரி 400,000 க்கும் அதிகமான நுகர்வோர்களுக்கு சேவையினை செய்கின்றது.
சதோச 1982 ஆம் ஆண்டு 17 இலக்க சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு முழுமையாக அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம்.


Disqus Comments