Wednesday, November 4, 2015

உலக சிறைக் கைதிகளில் 25% அமெரிக்கர்கள் - பராக் ஒபாமா தெரிவிப்பு

உலக சிறைக் கைதிகளில் 25% அமெரிக்கர்களாக காணப்படுவதாக என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5% மட்டுமே. ஆனால் உலக சிறைக் கைதிகளில் அமெரிக்க கைதிகளின் எண்ணிக்கை 25% ஆக உள்ளது.
சுமார் 22 லட்சம் அமெரிக்கர்கள் சிறையில் உள்ளனர். சுமார் 7 கோடி பேர் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். அதாவது 5 அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர்.
இப் பிரச்சினைக்கு தீர்வு காண சிறைத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறையில் கைதிகளுக்கு நல்லொழுக்கம், நன்னடத்தை நெறிகள் கற்றுத் தரப்படும்.
Disqus Comments