Thursday, March 17, 2016

கூட்டு எதிர்க் கட்சிகளின் ஹைட்பார்க் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு...

கூட்டு எதிர்க் கட்சியின் அரசாங்க எதிர்ப்புக் கூட்டம் இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி உட்பட கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் கலந்துகொள்ளவுள்ளன. இது தவிர, தமிழ், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், உள்ளுராட்சி, மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள், கலைஞர்கள் சங்கங்கள் என்பவற்றின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கூட்டத்தில், கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் சுமார் 38 பேர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் ஏற்கனவே கூட்டு எதிர்க் கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  (மு)
Disqus Comments