Thursday, October 4, 2012

விரிவுரையாளர்களின் பணிபகிஸ்கரிப்புக்கு இன்றுடன் மூன்று மாதம் நிறைவு

பணிபகிஸ்கரிப்பு என்னும் குழந்தைக்கு இன்றுடன் மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. கடந்த ஜுலை  மாதம் 4ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்பள உயர்வு மற்றும் சில மேலதிக கொடுப்பனவுகளுக்கான போராட்டம் இன்று வரை தொடர்கின்றமையை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இந்த பகிஸ்கரிப்பினால் நாட்டுக்கும் வீட்டுக்கும், பட்டதாரிகளுக்கும் பாரிய நஸ்டங்கள் தான் ஏற்பட்டிருக்கின்றன.

வழமையாக  வேலைநிறுத்தம் என்பது அடையாள வேலைநிறுத்தம் என்ற அடிப்படையில் ஓரிரண்டு நாட்கள் நடைபெறுவதுதான் கண்கூடு. ஆனால் இந்த வேலைநிறுத்தம் மாணவர்கள் அடையப்போகின்ற இலக்குகளை நிறுத்துகின்ற வேலைநிறுத்தமாக அமைந்தமை காணமுடியுமாக இருக்கின்றன. சுமார் மூன்று மாதம் என்பது ஒரு Semester யின் முக்கால் பங்கு நிறைவடையும் காலப் பகுதியாகும். ஆனால் இந்த வேலைநிறுத்தம் இன்னும் நிறைவுக்கு பல்கலைக்கழக ஆசிரியர்களாலோ அல்லது அரசாங்கத்தினாலோ சரியான ஒரு தீர்வுக்கு கொண்டு வரப்படாமல் இருக்கின்றதை பார்க்கின்ற போது மிகவும் கவலையளிக்கின்றது. 

இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர எத்தனையோ கலந்துரையாடல்கள், ஊர்கலங்கள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட அனைத்தும் நடைபெற்றும் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கின்றது. என்றாலும் இந்த நாடு இரண்டு பட்டதாரிகளை இழந்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம்.

எது எப்படிக்போனாலும் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலை எதிர்பார்த்து தனது உயர்கல்வியைத் தொடர்ந்திருக்கும் எமது நாட்டு எதிர்கால தலைமுறை என்பதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. 

குறிப்பு
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்த FUTA  மாணவர்களின் நலன் கருதி மஹபொல கொடுப்பனவையாவது அதிகரிகரிப்தை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தால் அது மாணவர்களுக்கு மிகுந்த நலவாக இருந்திருக்கும். எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2500 ரூபா தான்.

Disqus Comments