இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச
ஒரு நாள் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
ரன்கிரி
தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற
பாகிஸ்தான் அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானத்தது.
முதலில் துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் அணி 32.1 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான்
துடுப்பாட்டத்தில் பவாட் அலாம் மாத்திரம் 38 ஓட்டங்களை
பெற்றுக்கொடுத்தார். பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் 7 வீரர்கள்
ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் திசர பெரேரா 4 விக்கெட்களையும் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு தனது வெற்றிஇலக்கை அடைந்தது.
இலங்கையின் சார்பில் டில்ஷான் 50 ஓட்டங்களையும், மஹேல ஜயவர்தன 26 ஓட்டங்களையும் பெற்று பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணிசார்பில் வஹாப் ரியாஸ், மொஹமட் இர்பான், அஜ்மல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
