தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற நீண்டகால மோதலின் போது இடம்பெற்றதாக
கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து
விசாரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்களுக்கு இலங்கை, விஸா
அனுமதிப்பத்திரம் வழங்காதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐ.நா விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து வருகின்ற நிலையில், அவர்களை நாட்டுக்குள் விட மாட்டோம். இந்த விசாரணையை ஏற்கவில்லை. நாம் இதை எதிர்க்கிறோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் சர்வதேச ஊடகவியலாளர்களைச் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் இறுதி மாதங்களில், இராணுவம், 40 ஆயிரம் பொதுமக்களை கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களின் மீதான விசாரணைக்கு வாக்களித்த ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் அதிகாரத்தை ஏற்க இலங்கை மறுத்துள்ளது.
ஆனால், ஐ.நா விசாரணையாளர்கள் நாட்டினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். இதன்மூலம், இந்த விசாரணையில் சாட்சியமளிக்க விரும்பும் இலங்கையர்களை நேருக்கு நேர் சந்திப்பது மிகத் தெளிவாக தடுக்கப்படுகின்றது.
இருப்பினும், ஐ.நா.வின் ஏனைய நிறுவனங்கள் யாவற்றுடனும் தனது அரசாங்கம் ஓத்துழைப்புடன் செயற்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
ஆனால், ஏனைய ஐ.நா நிறுவனங்கள் என வரும்போது அவற்றுடன் பூரண ஒத்துழைப்புடன் வேலை செய்ய நாம் தயாராக உள்ளோம் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஏனைய தலைவர்களும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்.
அத்துடன், இலங்கை மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனது விசாரணையாளர்கள் இலங்கைக்கு போகத் தேவையில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார். அத்துடன், இலங்கைக்கு வெளியே போதுமான தகவல்கள் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நவநீதம்பிள்ளையின் இந்த கருத்து இலங்கை வெளிவிவகார அமைச்சினால் குற்றமாகக் காணப்பட்டது. இந்த விசாரணையானது, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்கிறது எனவும் அவரது முற்சாய்வுகளும் புறவயமின்மையும் துரதிர்ஷ்டமானது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.
ஒரு இலட்சம் பேருக்கு மேல் பலியான 3 தசாப்தகால யுத்தத்தின் முடிவின்போது, படையினர் யுத்தக் குற்றங்களை இழைக்கவில்லை என கொழும்பு வலியுறுத்துகின்றது. இந்த ராஜபக்ஷ அரசாங்கம், எதேச்சாதிகாரமான அரசாக மாறி வருகிறது. உரிமைகளுக்காக போராடுவோரும் ஊடகவியலாளர்களும் மிகவும் ஆபத்தில் உள்ளார்கள் என கடந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நவநீதம்பிள்ளை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.