இஸ்ரேலுடன் நீண்டகால யுத்த நிறுத்த உடன்படிக்கையை எட்டியுள்ளதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
எகிப்தின்
மத்தியஸ்தத்துடன் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்தின்
சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
2,200
பேரின் உயிர்களை காவுகொண்ட ஏழு வார மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும்
வகையில் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஹமாஸ்
இயக்க பிரதிநிதி மூசா அபு மர்ஷூக் தெரிவித்துள்ளார்.
உதவிப்
பொருட்கள் மற்றும் கட்டட நிர்மாணப் பொருட்களை காஸாவிற்குள்
அனுமதிப்பதற்கும் இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும்
இஸ்ரேல் அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை
வெளிப்படப்படவில்லை என பிபிசி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையில் மோதல்கள் நீடித்த நிலையில் இந்த திரும்புமுனை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









