ரியாத் - இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற 33 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
உடல்நலக்குறைவு
மற்றும் முதுமை ஆகிய காரணங்களினால் இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு
சென்றுள்ள 33 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்
மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரப் நியுஸ் பத்திரிகை
தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27 அன்று ஹஜ் யாத்ரிகர்களின் முதல்
குழு சவுதி அரேபியாவிற்கு வந்தனர். இந்த வருடம் சவுதி அரேபியாவில் ஹஜ்
பண்டிகை அக்டோபர் 4 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.
