Monday, September 15, 2014

கம்பைக் கொடுத்து அடி வாங்கிய முஸ்லிம் கௌன்சில்..!! ராகுல தேரர் கடும் துவேஷத்தைக் கக்கினார்.

(Puttalam Today) நேற்று(14) ஞாயிற்றுக்கிழமை  முஸ்லீம் கவுன்சிலின் வருடாந்தக் கூட்டம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.

இவ் வைபவத்திற்கு பிரதம பேச்சாளராக அழைக்கப்பட்ட களனி பல்கலைக்கழக பேராசரியர் பௌத்த பாலி கற்கை நெறிகளுக்கான பணிப்பாளர் கொட்டபிட்டிய ராகுல தேரோ அங்கு ஆற்றிய உரையை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு பல்கழைக்கழகத்தின் பேராசிரியர், அதுவும் பேருவளைப்பிரதேசத்தில் வாழ்ந்தவர் அவருக்கே முஸ்லீம்களின் அன்றாட உடை, உணவு, சட்டம். கலாச்சாரம் இருப்பு சரித்திரம் பொருளாதாரம், முஸ்லீம் நாடுகள் பொருளாதாரம் பற்றிய வாழ்க்கை முறை தெரியாமல் உள்ளார். அவ்வாறென்றால் சாதாரண பௌத்த மக்கள் எவ்வாறு முஸ்லீம்களை புரிந்து வைத்திருப்பார்கள்.

இதற்கு முதற் காரணம் எமது சமுகத்தில் கல்வியியலாளர்,  ஆண்மீகவாதிகள், பணம்படைத்தவர்கள், எழுத்தாளர்கள் இதுவரை முஸ்லீம்களின் அடிப்படைவாழ்க்கைமுறைகளை சிங்களமொழி மூலம் நூல்களையோ விளக்கங்களையோ தெரியப்படுத்தவில்லை. நாம் அடுத்தவரை விலக்கி நாம் ஏதோ அரபு நாடொன்றில் வாழ்ந்து வருகின்றோம். என நினைத்துக்கொண்டிருகின்றனர். ஏனைய சமுத்தில் ஜக்கியத்தையும் நமது கலாச்சாரத்தை மதத்தையும் தெளிவுபடுத்த எவ்வித செயற்பாடுகளையும் செய்யவில்லை. என தெரியவருகின்றது.

எனவேதான் இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களைப் பற்றி சந்தேகக் கண்னோடு பார்க்கின்றார்கள்.

அந்தத் தேரர் அங்கு சமுகமளித்திருந்த முஸ்லீம் புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் மௌலவிகள், இலக்கியவாதிகள்  முன் வைத்த காரணங்கள் -
அளுத்கம பேருவளை சம்பந்தவத்தினை நான் அவுஸ்திரேலியா ஊடகமொன்றில் பௌhத்த தேரர்கள் 3 முஸ்லீம்களை கொண்றார்கள். என தெரிவித்திருந்தனர். இந்தச் செய்தியில் நானும் ஒரு பௌத்த தேரர் நான் இந்தச் செய்தியால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

முஸ்லீம்களிடையே இனரீதியான அரசியல் கட்சிகள் தோண்றியபின்  ஒரு  முஸ்லீம்முக்குத்தான் முஸ்லீம்கள் தேர்தலில் வாக்கு அளிப்பார்கள்.    ஆனால்  பேருவளையில்  இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் தந்தைக்கும் ஐ.ஏ காதருக்கும் பேருவளை பிரதேசத்தின் சிங்கள மக்கள் பெரும்பாண்மையாக  வாக்களிப்பார்கள். அந்த தலைவரையே எமது சமுகத்தின் தலைவராக கருதுவோம். தற்காலத்தில் சிங்கள தலைவருக்கு முஸ்லீம்கள் வாக்களிப்பார்களா ?

தேரர்ருக்கு தெரியாமல் உள்ளது ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் 15 இலட்சம் முஸ்லீம்களும் ஒரு பௌத்த ஜனாதிபதிக்கே வாக்களிக்கின்றார்கள். அது மஹிந்தவோ, ரணிலோ அல்லது முன்னாள் ஜனாதிபதி யாராக இருந்தாலும் முஸ்லீம்கள் பௌத்தர்க்கே வாக்களிக்கின்றனர்.
பேராசிரியர் ராகுல தேரரின்  துவேசங்கள் :

01. நீங்கள் பலதார திருமணம்செய்கின்றீர்கள் 10,15, என குழந்தைகளைப் பெற்று சனத்தொகையை பெருக்குகின்றீர்கள். இந்த நாட்டில் முஸ்லீம் சனம் பெருகினால் பௌத்தர்கள் எங்க போவது ?

02.    ஹலால் என்பது உங்களது உணவாக இருக்கலாம். ஆனால் அதில் உங்களது மத இலட்சனையை  உங்களது வியாபார பொருட்கள் ஊடாக புகுத்தி இந்த நாட்டில் ஏணையவருக்கும் அதனை பிரச்சாரம் செய்கின்றீர்கள்.03. இந்த நாட்டில் அண்மைக்காலமாக கருப்பு ஆடை அணிந்த பெண்கள் நடமாடுகின்றனர். இந்த கருப்பு ஆடை முன்னைய காலத்தில இருந்ததில்லை.

04. பள்ளிவாசலில் உங்களது தொழுகைகளை அடுத்தவருக்கு இடைஞ்சலாக  ஸ்பீக்கரில் சத்தம் செய்கின்றீர்கள். இதனால் உங்களது மத அனுஸ்டானத்தை பலவந்தமாக எங்களுக்கு உணாத்துகின்றீர்கள்.
05. இலங்கையில் எங்கெல்லாம் நகரங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று கடைகளை அமைத்து கட்டியாகவும் அடாத்தியாகவும் வாழ்வதற்காக சகல நகரங்கையும் ஆக்கிரமிக்கின்றீர்கள். அங்கு உங்களது மதம் மற்றும் கலாச்சாரத்தை நிர்மாணிக்கின்றீர்கள். ஆனால் மற்றைய இனம் வாழ்வதற்கான சூழழுக்கு குந்தகம் விளைவிக்கின்றீர்கள்.

06.  பலவந்தமாக தங்களது மதத்தை புகுத்தி பௌத்தர்களை இஸ்லாத்திற்கு மதமாற்றுகின்றீர்கள். 

இந்தோனியா, மலேசியா, ஆப்பகணிஸ்தான் போன்ற நாடுகள் பௌத்த நாடுகள் இன்று அது முஸ்லீம் நாடுகளாக இருக்கின்றது. அதுபோன்று எங்களது பௌத்த  நாடும் மாறிவிடுமோ என நாங்கள் அஞ்சுகின்றோம்.
07. இந்த நாட்டுக்குள் இஸ்லாமிய பல்வேறு இயக்கங்கள், சக்திகள்  ஊடுருவி உள்ளன.

பொருளாதாரத்தில் நீங்கள் வேண்டிய நாடுகளுக்கெல்லாம் சென்று வியாபாரத்தில் முன்னேறி இந்த நாட்டில் பொருளாதாரத்திலும் பாரிய முன்னேற்றத்தை நிலை நாட்டுகின்றீர்கள் ஆனால்  இது ஒரு  பௌத்த நாடு அவர்களுக்கும் ஒரு முறையான சட்டம் கலை மதம் கலாச்சாரம் அரசியல் அதிகாரம் உள்ளது.

ஆகவேதான் இந்த சந்தேகங்களை கொண்டு பௌத்தர்கள் சந்தேகக் கண்னோடு தான் முஸ்லீம்களை பார்க்கீன்றார்கள். உலகில் உங்களது அரபு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் மதரீதியாகவே நடைபெறுகின்றன. ஒரு காலத்தில் பௌத்தர்களுக்கும் இந்த நாடு இல்லாமல் போகிவிடுமோ என்ற சந்தேகம் உள்ளது. இதனை  நீங்கள் பௌத்த மக்கள் மத்தியில் தெளிபடுத்த வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
Disqus Comments