Monday, September 22, 2014

கிழக்கு பல்கலை இரு முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் இரண்டாம் வருட  மாணவர்கள் இருவர் திங்கட்கிழமை (22)  அதிகாலை  தாக்குதலுக்குள்ளாகி  படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் பகுதியைச் சேர்ந்த சோதிவேல் டொனால்ட் (வயது 22), கதுறுவெலயைச் சேர்ந்த எம்.இஷட். முஹம்மத் ஜறூக் (வயது 22) ஆகியோரே  தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு முகத்துவார (பார் றோட்) வீதியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்; தங்கும் விடுதியினுள் உள்நுளைந்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவபீடத்தின் 3ஆம் வருட மாணவர்கள் 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக  தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்களும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், எம்.இஷட்.முஹம்மத் ஜறூக் என்பவர்  நினைவாற்றல் இழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கடந்த 03.09.2014 அன்று கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடத்தின்   முதலாம் வருட  மாணவர்கள் மூவர் மோசமான பகிடிவதைக்கு  உள்ளான நிலையில்,  உடல் நிலை பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments