Wednesday, September 24, 2014

மாவனல்லை நகரில் தீ (படங்கள், வீடியோ இணைப்பு


கேகாலை - மாவனெல்ல நகரில் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத் தொகுதியில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தினால் பல கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது மக்களும் பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



Disqus Comments