Saturday, September 27, 2014

துபாயில் ஒழுக்கச் சீா்கேடு காரணமாக இலங்கை இளைஞருக்கு சிறை

வர்த்தக நிலையம் ஒன்றில் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படும் இலங்கை இளைஞர் ஒருவருக்கு துபாயில் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த 29 வயதான இளைஞர் வர்த்தக நிலையத்தில் கொள்வனவு செய்ய வந்திருந்த நுகர்வோரை தேவையற்ற முறையில் தொட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர் கடைக்கு அடிக்கடி வரும் நபர் என அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

நபரொருவர் கடைக்கு வருபவர்களை தவறான முறையில் தீண்டுவதாக நுகர்வோர் ஒருவரால் முறையிடப்பட்டுள்ளது.

பின்னர் கெமராக்களை சோதனை செய்தபோது, குறித்த நபர் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரை தவறான முறையில் தீண்டியமை பதிவாகியிருந்தது.

இதனையடுத்து குறித்த நபர் ஒருவாரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்த போது கைதாகியுள்ளார்.

எனினும் அவர் தனது தவறுக்கான மண்ணிப்புக் கோரியதும் அந்த வீடியோக் காட்சிகளில் பதிவாகியுள்ளதாக கடை உரிமையாளர் வழக்கறிஞரிடம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments