Sunday, September 7, 2014

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நாளை ஆரம்பம்

பல்கலைக்கழக அனுமதி பெற்ற 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் நாளை திங்கட்கிழமை (08) ஆரம்பிக்கின்றன. கன்னொருவ சக்தி மற்றும் பொறியியல் பயிற்சி பாடசாலையில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி குழுவினர், மூன்று பகுதியினராக பிரிக்கப்பட்டு மூன்று கட்டங்களாக இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதன்பிரகாரம், முதலாவது குழுவினருக்கான பயிற்சிகள் நாளை ஆரம்பித்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இரண்டாவது குழுவினருக்கான பயிற்சிகள் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. மூன்றாவது குழுவினருக்கான பயிற்சிகள், ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments