Tuesday, September 9, 2014

சயிட் அஜ்மால் ஐ.சி.சி.யினால் அதிரடியாக நீக்கம்: முறையற்ற பந்து வீச்சு என நிரூபணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயிட் அஜ்மால் ஐ.சி.சி.யினால் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். சயிட் அஜ்மாலின் பந்து வீச்சு முறையற்றது என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்தே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதனால் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து சயிட் அஜ்மால் நீக்கப்பட்டுள்ளார்.
 
அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் உள்ள அதி உயர் தொழினுட்பத்தை கொண்ட தேசிய கிரிக்கெட் மையத்தில் ஐ.சி.சி. அதிகாரிகளினால் ஆராயப்பட்டு வந்த நிலையில் சயிட் அஜ்மாலின் பந்து முறையற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
37 வயதுடைய சயிட் அஜ்மால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ளதோடு, சர்வதேச இருபது-20 போட்டிகளில் நான்காவது இடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்து பந்து வீச்சாளர்களுக்கு ஐ.சி.சி. தரப்படுத்தலில் 9ஆவது இடத்தில் உள்ளார்.
 
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 35 போட்டிகளில் பங்கேற்றுள்ள அஜ்மால் 178 விக்கெட்டுகளையும், ஒரு நாள் அரங்கில் 111 போட்டிகளில் பங்கேற்று 183 விக்கெட்டுகளையும், இருபது-20 அரங்கில் 63 போட்டிகளில் 85 விக்கெட்டுகளை சயிட் அpஜ்மால் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments