Monday, October 6, 2014

2015 ஜனவரி முதல் இரட்டை பிரஜாவுரிமை - மஹிந்த ராஜபக்ஷ

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரண்டை பிரஜாவுரிமை  இற்;றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது.

அதேபோல, இலங்கையின் வங்கியொன்றை இத்தாலியிலும் மிலான் நகரில் இலங்கைக்கான துணை தூதரகத்தை நிறுவப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இலங்கை பிரஜைகள் 1,200 பேர் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments