கம்பளை கண்டி வீதியில் ஒரே இரவில் ஆறு கடைகள் உடைத்து கொள்ளைடிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து கொண்டிருந்த கடும் மழையை தமக்கு சதகமாக
பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் கண்டி வீதியில் தொடரான அமைந்திருந்த
பால்மா விற்பனை நிலையம், உரக்கடை, இரும்புக்கடை, கணினி, மின் உபகரணங்கள்,
தையல் இயந்திர விற்பனை நிலையங்களுமாக மொத்தம் 6 கடைகளையும் உடைத்து
உட்புகுந்து அங்கிருந்த பணங்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கம்பளை பொலிஸார் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லையென தெரிவித்துள்ளனர்.
