Friday, February 20, 2015

கர்ப்பமாய் இருக்கும் போது சூடான பானங்களை தவிர்க்கச் சொல்வது ஏன்?

உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது, உணவுக்குழாய் புண்பட்டு, அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்சனை ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தராது என்பதால், சூடான பானங்களை தவிர்க்க வேண்டும். 

கர்ப்ப காலத்தில், உடலில் ஏற்படும் நீர் வறட்சியை சமாளிக்க, குளிர்ச்சியான உணவுகளை மனம் தேடும். அந்த சமயத்தில், கட்டுப்பாடு இல்லாமல், அவ்வுணவுகளை சாப்பிடுவதால் சளி, இருமல் ஏற்படும் வாய்ப்புண்டு. 
கர்ப்பிணிகள் சிலருக்கு உடல்பருமன் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அல்லது உப்பின் அளவு, திடீரென கூடும். சிலருக்கு மரபணுக்களில் உள்ள குறைபாடுகளால் இப்பிரச்சனை ஏற்படும். இதனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும் வாய்ப்புண்டு. இச்சூழலில்தான், குறைப் பிரசவம் அல்லது கருப்பையில் குழந்தை இறந்து போதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும்.   
கர்ப்ப காலத்தில், குழந்தையின் வளர்ச்சிக்கு தக்கவாறு, கருப்பையானது விரிவடையும். வயிற்றிலுள்ள குழந்தை அசையும் போதெல்லாம், அடிவயிற்றில் பிடிப்புடன் கூடிய வலி ஏற்படும். இது சகஜமானதே; பயப்படத் தேவையில்லை. கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிலையின் போதும், குழந்தையின் உடல் உறுப்புகள் வளர்ச்சியடைவதால், வயிறு பெரிதாக பெரிதாக, அதை தாங்கும் முதுகில், வலி அதிகரித்தபடி இருக்கும். இத்தகைய வலியை, பிரசவம் முடியும் வரை அனுபவித்து தான் ஆக வேண்டும். 
Disqus Comments