
உலகக் கிண்ண போட்டியில் அதிவேகமான அரைச்சதமடித்து நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம் புதிய சாதனை படைத்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் இன்று இடம்பெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதயை படைத்துள்ளார்.
18 பந்துகளில் அரைச்சதம் கடந்த மெக்கலம் , 25 பந்துகளில் 77 ஓட்டங்களைப்பெற்ற வேளை வோக்ஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் உள்ளடங்கும்.
இதேவேளை கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின்போது கனடாவுக்கு எதிராக, 24 பந்துகளில் அரை சதம் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது.
இதுவரை இருந்த சாதனைக்கும் சொந்தக்காரார் மெக்கலமே. எனவே, தனது சாதனையை தானே முறியடித்தார் மெக்கலம்.