முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும், சில கட்சிகள் அவரை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க
முயல்வதாகவும், அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட
முன்வருவாராயில் கட்சி இரண்டாகப் பிளவு படும் எனவும் தெரிவித்துள்ள
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும்
தேர்தலில் போட்டியிடுவது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் காரர் என்ற வகையில் இவ்வாறு கட்சி இரண்டாகப் பிளவு படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி காரணமாக இருக்க மாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று “அபே கம” (எங்கள் ஊர்) மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. எனினும் கட்சி மீது பற்றிருந்திருக்குமாயில் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.