Friday, February 20, 2015

வர்த்தமானி அறிவித்தலில் வெளியான விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விலைகள்.

அத்தியாவசிய பொருட்கள் உட்பட வரவு – செலவு திட்டத்தில் விலை குறைப்பு செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விலைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்றை அரசாங்கம் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

அத்துடன் விலை குறைப்பு செய்யப்பட்ட விலைகளில் பொருட்கள் பொதுமக்களை சென்றடைகின்றனவா? என்பதை கண்டறிய பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

புதிய அரசின் இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் போது வாகனங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக குறைக்கப்பட்ட போதும் அதன் நன்மை பொதுமக்களை சென்றடையவில்லை என்ற பரவலான குற்ற ச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனடிப்படையில் உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் பொது நிர்வாக மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய ஆகியோரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யிருக்கிறது.

1000 சீசீ.க்கு குறைவான வாகனங்களுக்கு 15 வீத வரி குறைப்பு செய்துள்ள போதும் பாவனையாளர்களுக்கு இது கிடைப் பதில்லை என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது, இது தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவித்தல் வந்த பின்னர் பொதுமக்கள் பொருட்களின் விலைகள் தொடர்பாக அறிந்துகொள்ள முடியும்.

என்பதுடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதன் பொறிமுறை ஊடாக பொதுமக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைக்கின்றதா? என்பதை உறுதி செய்யும். இதற்கான முழு அதிகாரமும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார். நேற்று நள்ளிரவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிவித்தலில் 
  • சீமெந்துக்கான சில்லறை விலை 50 கிலோ மூடை 840 ரூபா.
  • பாண் 450 கிராம் 54 ரூபா,
  • சீனி (வெள்ளை) பக்கற்றில் அடைக்கப்படாத ஒரு கிலோ 90 ரூபா
  • பால் மா 400 கிராம் 325 ரூபா ஒரு கிலோ – 810 ரூபா
  • சஸ்டஜன் பால் மா 400 கிராம் 1500 ரூபா
  • கோதுமை மா ஒரு கிலோ 90 ரூபா (பக்கற்றில் அடைக்கப்படாத)
  • பயறு – 280 ரூபா (ஒரு கிலோ)
  • நெத்தலிக் கருவாடு ஒரு கிலோ 525 ரூபா
  • டின் மீன் 425 கிராம் 260 ரூபா
  • கொத்தமல்லி (அரைத்த) 348 ரூபா
  • ஒரு கிலோ
  • உழுந்து ஒரு கிலோ 285 ரூபா
  • மாசிக் கருவாடு ஒரு கிலோ 1740 ரூபா
  • மஞ்சள் (கட்டி) ஒரு கிலோ 265 ரூபா
  • மிளகாய் (வற்றல் தூள்) ஒரு கிலோ 350 ரூபா


என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Disqus Comments