உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது காலிறுதி போட்டியில் இலங்கை 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
மழை விட்டதும் மீண்டும் போட்டி ஆரம்பமான நிலையில் 37.2 ஓவர்களில் இறுதி விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் சிட்னி மைதானத்தில் இன்று புதன்கிழமை(18) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
குமார் சங்கக்கார 96 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களையும் லஹிரு திரிமான 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென்னாபிரிக்க அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
