Tuesday, March 10, 2015

5 இலட்சம் ரூபாய் மருந்தை 550 ரூபாய் ஆக்கும் MY3யின் ஔடத சட்டமூலம்.

Dr. IDROOS MUHAMMAD MUHAMMAD ILYAS. ஔடதடங்கள் (மருந்து) பாதுகாப்பு சட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமாயின் முதலில் கம்பனி பெயா்களில் டாக்டா்கள் (Prescription) மருந்துச் சீட்டு எழுதுவதை முதலில் தடை செய்ய வேண்டும்.  எத்தனையோ போ் இருதயநோய், சக்கரை நோய் மற்றும் GASTRIC ULCER. புற்று நோய்க்கு மருந்து எடுக்க  பணம் இல்லாமல் நோயாளியை கைவிட்டு விடுகின்றார்கள். 

புற்று நோய்கள் ஒரு  வருடத்துக்கு டாக்டா்கள் ஐந்து இலட்சம் ரூபாய் மருந்து 
கம்பின பெயரில் Prescribe பன்னுகின்றார்கள்.  அதே மருந்து கெம்பனி பெயா் இல்லாமல் CHEMICAL பெயரில் எழுதியனால் 550 ரூபாய்க்கு வாங்கலாம். நான் வாங்கிக் கொடுத்துள்ளேன். 

ஆனால் வைத்தியா்மார்கள் இது ”எலக்க” மருந்து (தரம் குறைந்ந மருந்து)
என் பொய் சொல்கின்றார்கள்.  ஒவ்வொரு SOCIALIST டாக்டா்மார்களும் கம்பனிக்காரன் கொமிஷன்  கொடுப்பதனால் இந்த படு மாபாதகமான துரோகத்தனத்தை செய்கின்றார்கள். எத்தனையோ உயிர்கள் இப்படியான இரத்தம் உறிஞ்சும் டாக்டா் எமன்களால் பலியாகின்றனா். ஒரேயொரு உதாரணம் சொல்கின்றேன்.

அமெரிக்காவில் CARDIAC ASPIRIN வாங்க முடியாமல் எனது உறவினரான மருமகன்  ஒருவா் இருதய நோயினால் உயிர் நீத்தார். அவருக்கு அந்த மருந்து வாங்க 100 டாலா் அப்போது தேவைப்பட்டது. அதே மருந்து இங்கு உள்ள எந்த பெட்டிக் கடையிலும் வாங்க முடியும். அதன் விலை ஒரு மாத்திரை அப்பொழுது ஐம்பது சதம் மாத்திரமே. அதன் பெயா் தான் அப்பிரின் (ASPIRIN).  அதற்கு அங்கு ஆயிரம் மா்க்கட் ட்ரேட் பெயா் போட்டு 15000 ரூபாய்கள் என்று விக்கின்றா்கள் பல்தேசியக் கம்பனிக்காரா்கள். 

இப்படிப்பட்ட மருந்துக்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரு
முன்னேற்பாடாக மைத்திரியினால்  கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட மூலத்துக்கு நாம் ஒரு SALUTE போட்டே ஆகவேண்டும்.

Disqus Comments