நாரஹேன்பிட்ட மொத்த வர்த்தக களஞ்சிய சாலையிலிருந்து மீட்கப்பட்ட சிறிய ரக விமானம், இலங்கை விமானப்படையின் அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான கடற்படையைச்சேர்ந்த லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவும் பணிப்பாளராக இருக்கின்ற சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களும் அங்கிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
