மதுரங்குளி பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் திரவப் பொருள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருளின் நிறை 13 கிலோ 500 கிராமுக்கும் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
இதன்போது பண்ணையில் இருந்த மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் இது இறால்களுக்காக பயன்படுத்தப்படும் திரவம் என கைதானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகயை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
