Thursday, March 19, 2015

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவா் அமைச்சா் ரிஷாட் பத்தியுத்தீன் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதுவர்         (David Daly )டேவிட் டாலிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது.

இதில் சமகால அரசியல் நகர்வுகள்,தேர்தல் முறைமை மாற்றங்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் வர்த்தக கொள்கைகள் போன்றவைகளை அமைச்சர் தூதுவரிடம் விளக்கினார். 

வர்த்தக மற்றும் முதலீட்டு மாற்றத்துடன், GSP Plus மீளப்பெறுவதற்கான தேவை, மீன் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படல் போன்றவைகளை அமைச்சர் தூதுவரிடம் முன்வைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை வர்த்தக சமூகங்கள் இடையே நெட்வொர்க்கிங் ஒன்றை ஏற்படுத்துவது.

இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு, தொழில்நுட்ப, பொருளாதார, கலாச்சார தொடர்புகள் வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் சிறப்பாக தொடர்பு கொள்ள வறிய மக்கள் பிரிவினர் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும்,மீள்குடியேற்றம் செய்வதற்கான உதவிகளை மேற்கொள்வது போன்ற முக்கிய விடயங்களை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தூதுவர் உறுதியளித்தார்.

Disqus Comments