(MS) கடந்த
இருவாரங்களாக செய்தி இணைய தளங்களில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், வானொலிகளில்,
மற்றும் சமுக வலைதங்களில் உலாவரும் ஒரு முக்கியமான விடயம் தான் சீகிரிய ஓவியத்தில்
தனது பெயரை கிறுக்கியமைக்காக மட்டக்களப்பைச் சோ்ந்த ஒரு யுவதி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றாள் என்பது.
குற்றங்களின்
பார தூரம் அடிப்படையில் பார்க்கும் போது இது ஒரு சாதாரண குற்றம் தான். ஆனால் அதற்கு
இரண்டு வருட சிறை தண்டனையா? எனும் போது பல்வேறு சந்தேகங்கள் மனதில் எழுகின்றன.
ஏனெனில்
இவ்வாறு சீகிரிய ஓவியத்தில் தனது பெயரை கிறுக்கியவா்களில் இந்தப் பெண் முதலாமவா் இல்லை
என்பது தெளிவு. இதற்கு முன்பு இந்த சாதனையை நிறையப் போ் செய்திருக்கின்றார்கள். கடந்து
சில மாதங்களுக்கு முன்பு கூட கல்முனைப் பிரதேசப் பாடசாலையைச் சோ்ந்த முஸ்லிம் மாணவி
கூட இந்த சாதனையை நிகழ்த்தி கைது செய்யப்பட்டு பின்னா் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின்
தலையீட்டின் காரணமாக அவா் விடுவிக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆக
குறிப்பிட்ட தமிழ் பெண்ணுக்கு மட்டும் ஏன் இரண்டு வருட தண்டை வழங்க வேண்டும் என்பது
யோசிக்க வேண்டிய விடயமாகும்.
கல்முனை
முஸ்லிம் மாணவி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு மஹிந்த வின் ஆட்சிக்காலத்திலாகும்.
ஆனால் இந்த தமிழ் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருப்பது மைத்திரியின் நல்லாட்சி
காலத்தில் எனும் போது சந்தேகங்கள் இன்னும் வலுக்கின்றன.
விசயத்துக்கு
வருவோம். ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ அவா்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லையென்று
யாருக்கும் சொல்ல முடியாது. ஆனால் குறிப்பாக தமிழ் மக்கள், மற்றும் முஸ்லிம்கள் தான்
தனது தோல்விக்கு காரணம் என்பதை மஹிந்த ராஜபக்ஷ சில தினங்களுக்கு முன்பு தென் இந்திய
தொலைக்காட்சிக்கு வழங்கி பேட்டி ஒன்றில் மறைமுகமாக சொல்லியிருந்தார். அதாவது வடக்கு மற்றும் கிழக்கு வாக்களிப்பை நான் தவறாக
கணித்துவிட்டேன். மாகாண சபைத் தேர்தலில் கூட 55 சதவீத
வாக்களிப்பே இடம்பெற்றது. ஆனால், இந்த
தேர்தலில் அது 80
சதவீதத்தையும் தாண்டிவிட்டது. இது ஏனென்று
எனக்குத் தெரியாது.
என்று கூறியிருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு (தமிழ் மற்றும் முஸ்லிம்) மத்தியில் தனக்கு ஆதரவு
குறைந்து மைத்திரிக்கு அதிகரித்தமையினால் தான் தான் தோல்வி அடைந்து விட்டேன்
என்பது தெளிவு விடயமாகும்.
எல்லாம் நடந்து விட்டாலும் ஆட்சியில் மாற்றம் இடம்பெற்று விட்டாலும் அரச
மட்டங்களில், திணைக்களங்களில், அரச வங்கிகளில், பிரதேச செயலகங்களில்,
பாடசாலைகளில், குறிப்பாக நீதி மன்றங்களில் எல்லாம் மஹிந்த ஆதரவு( மஹிந்தவுக்கு
வக்காலத்து வாங்கும்) அதிகாரிகள் இன்னும் பணியாற்றிக் கொண்டு தான்
இருக்கின்றார்கள்.
குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் மைத்திரி தலைமையில் அமைந்த
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் மீது சிறுபான்மையினரின் வெறுப்பைத்
தூண்டும் நிகழ்ச்சியாக சீகிரிய ஒவிய தண்டனை விவகாரம் பார்க்கபட வேண்டியதாகும்.
காரணம் இதனை விட கொரூரமான குற்றங்கள் கூட ஒரு சில நாட்கள், சிறைவாசத்துடன் அண்மையில்
விடுதலை செய்யபட்டதை காணலாம்.
v விமல் வீரவனசவின் மனைவியின்
போலி ஆவனங்களைக்
கொடுத்து இராஜதந்திர
கடவுச் சீட்டு
தயாரித்தமை
v ரிஷாத் பத்தியுத்தீன்
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்தபோது அமைச்சுக்குள் அத்து மீறி பிரவேசித்து
காடைத்தனம் செய்த பிக்குமார்கள் பினையில் விடுதலை.
சிறு
குற்றத்துக்கு பாரி தண்டனையையும் பாரிய குற்றங்களுக்கு சிறு தண்டனையும் வழங்கும் இது
போன்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அரச அதிகாரிகள் மைத்திரியின் ஆட்சியில்
சேறு பூசும் நடவடிக்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது புலனாகின்றது.
என்னதான்
இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரி அவா்கள் இது போன்ற சிறிய அசம்பாவிதங்களை அறிய வாய்ப்பில்லை
தான். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்
வாதிகள் அங்காங்கு இது போன்ற சிறுபான்மையினா் மீது மேற்கொள்ளப்படு மிலேச்சத்தனமாக,
பக்கச் சார்பான நடவடிக்கைகளை ஜனாதிபதி அவா்களின் கவனத்துக்கு கொண்டு அவரது பொது மன்னிப்பின்
கீழ் மன்னிப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பது சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பாகும்.
