வடமேல் மாகாணத்தில் சுமார் 3200க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் பூரனப்படுத்தப்படாமல் உள்ளன. அன்மையில் நடந்த ஆசிரியர் நியமனம் தொடர்பான போட்டிப் பரீட்சையின் வாயிலாக வெறும் 200 நியமனங்கள் மாத்திரம் வழங்கப்படவுள்ளன. அதிலும் தமிழ் மொழி ஆசிரியர்கள் மிகவும் சொற்பமானவர்களே உள்வாங்கப்ட்டுள்ளனர்
ஒவ்வொரு பட்டதாரி ஆசிரியர் நியமனங்களின் போதும் தமிழ் மொழி பட்டதாரிகள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதிகபடியான ஆசிரியர் வெற்றிடங்கள் புத்தள பகுதியிலயே காணப்படுகின்ற. அதே சமயம் குருநாகல் பகுதியில் 360க்கும் அதிகமான ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாக பத்திரிகை செய்திவாயிலாக அறியக் கூடியதாக உள்ளது.
இவ்விடயம் தொடர்பாக புத்தள மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு சிறந்த முடிவொன்றினை பெற்றுத்தர முயற்சிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்....
தகவல்:விருதோடை பட்டதாரிகள் சங்கம்.