Tuesday, May 31, 2016

நோன்பு நெருங்குகின்றது. மீண்டும் கிரிஸ் பூதம் வருமா? புத்தளம் விருதோடை திருட்டு சம்பவங்களின் பின்னனி என்ன??

(பிராந்திய நிரூபா்)

  • நோன்பு நெருங்குகின்றது. 
  • மீண்டும் கிரிஸ் பூதம் வருமா?
  • புத்தளம் விருதோடை திருட்டு சம்பவங்களின் பின்னனி என்ன??
  • பிரதேச மக்கள் ஆச்சா்யத்தில்.


ரமழான் மாத நோன்பு ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்ற நிலையில் முஸ்லிம் பிரதேசங்களில் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக புத்தளம் மாவட்டத்திலுள்ள மதுரங்குளி, விருதோடை பிரதேசங்களில் திருடர்கள் தொடர்பான சம்பவங்களன் கடந்த சில தினங்களாகப் பதிவாகின்றன.

இந்த திருடர்கள் நடமாட்ட சம்பவங்கள் தொடர்பாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்ற தகவல்களை வைத்து நோக்கும் நோக்கும் போது மீண்டும்' 2013, 2014 வருடங்களில் ரமழான் மாத நோன்பு காலங்களில் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களுக்கான முன் சமிங்ஞையாக இது இருக்க முடியுமா எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

அந்தக் காலப் பகுதியில் முஸ்லிம்கள் தம் மார்க்கக் கடமைகளில் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும் இரவு வேளைகளில் அச்சம் பீதியுடன் முஸ்லிம்கள் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலைக்கு ,தள்ளுவதற்கு இத்திருட்டுச் சம்பவங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டனவோ அதே ஒழுங்கையே இந்நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன.

அன்று திருட்'டு சம்பவங்களாக ஆரம்பமாகி தான் கிறீஸ் பூதங்கள் உருவாகின. அதன் காரணத்தினால் ரமழான் மாத நோன்பு ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளன. அதன் காரணத்தினால் இவ்விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி முஸ்லிம்கள்' ரமழான் கால கடமைகளை அச்சம் பீதியின்றி சுதந்திரமாக நிறைவேற்றக் கூடிய சூழலை உறுதிப்படுத்த வேண்டியது. அரசாங்கத்தின் பொறுப்பாகும்.”
Disqus Comments