சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 16 பங்களாதேஷ் பிரஜைகள் குருநாகல் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பானதுறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபர்கள் கூலி நிமித்தம் குருநாகல் பகுதியின் பல்வேறு இடங்களில் வேலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை இவர்களை பானதுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பானதுறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.