Monday, June 6, 2016

சுகாதார பிரதியமைச்சரினால் புழுதிவயல் மத்திய மருந்தகத்திற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுகீடு

(ஜெஸீம் ரஹ்மான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசினால் புழுதிவயல் மத்திய மருந்தகத்திற்கு 2 மில்லியன் ஒதுகீடுசெய்யப்பட்டுள்ளது.

பு/அக்கரபத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று புழுதிவயல் கிராமத்திற்கு வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தேசிய தலைவரிடமும், சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்களிடமும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ நியாஸ் ஊடாக புழுதிவயல் மக்கள் விடுத்த வேன்டுகோளை அடுத்து.வைத்திய சாலைக்கு உடனடி தேவையாக உள்ள வைத்திய விடுதி அமைப்பதற்காக 2மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைத்திய சாலையை தரமுயர்த்துவதற்கான மேலதிக நடவடிக்கையினை மாகாண சுகாதார அமைச்சருடன் கலந்துறையாடி சொய்து தருவதாக அமைச்சர் பைசல் காசீம் உறுதியளித்தார்.
Disqus Comments