Wednesday, June 15, 2016

வெள்ள அனர்த்தத்தின் போது முஸ்லிம்களின் செயற்பாடு போற்றத்தக்கது..!! பொலீஸ் மா அதிபா் புகழாரம்.

நாட்டில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின் பின்னர் முஸ்லிம் சமூகம் பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்துடன் இணைந்து செயற்பட்ட எண்ணற்ற சந்தர்ப்பங்களை அவதானித்தோம். மத தலைவர்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நாம் இதனைப்பாராட்டுகின்றோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் -13 -இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

9
முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் தமது கடையிலும் நோன்பிருப்பதை நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல் ஏனைய சமூகத்தினருக்கும் முன்மாதிரியை காண்பித்துள்ளனர்.

ரமழான் ஆனது இறைவன் வழங்கியுள்ள அருட்கொடைகளுக்கு நற்காரியங்கள் மேற்கொண்டு நன்றி செலுத்தும் காலமாகும். ரமழான் என்பது வெறுமனே நோன்பு நோற்பது மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கிடையிலும் ஏனைய சமூகத்தவருக்கிடையிலும் பிணைப்பை ஏற்படுத்துவதாகும்  என அவர் மேலும் தெரிவித்தார்.
Disqus Comments