Wednesday, June 29, 2016

புத்தளத்தின் நவீன அரசியல் ஐயாக்களும், சாஹிரா பஸ்ஸும்

பெருநாள் களியாட்டம் எனும் பெயரில் ஆரம்பமான நிகழ்வு இன்று திணைக்களங்களின் சேவைகள் பெறலும் இடம்பெறும் என்பது வரை விரிவு பெற்றுள்ளது.


பத்து இலட்சம் நிதி எனும் விடயம் இப்பொழுது 40 இலட்சங்கள் எனும் கதையாடல்களை தோற்றுவித்து உள்ளது.

ஆண்களுக்கு வேறாக பெண்களுக்கு வேறாக நிகழ்வு இடம்பெறும் , பெண் பொலிசார் கடமையில் ஈடுபடுத்த படுவார்கள் , ஒலிபெருக்கியில் அடிக்கடி அறிவிப்புகள் செய்யப்படும் என்றெல்லாம் விளம்பரங்கள் நீள்வதை காண்கிறோம்.

நாளை இன்னும் கொஞ்சம் பேச்சுக்கள் விரிவடையலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
நேற்று நாம் கேட்ட பஸ் எதற்கு என்ற கேள்விக்கும், இது வரை தலைமை தாங்கிய பெரியப்பள்ளியை இந்த விடயத்தில் உதாசீனம் செய்தல் ஏன் ? என்ற கேள்விக்கும் விடை கிடைக்காத போதும் இன்னும் சில விடயங்களை தொட்டு காட்ட முனைகிறோம்.
அதே போன்று தான் விஞ்ஞான கல்லூரி மதில் விடயம் இப்தார் ஒன்றோடு பேச்சு வந்த போது நமது நகர வர்த்தக சமூகமும் , நமது தொகுதி அரசியல்வாதிகளும் இணைந்து பல இலட்சங்களை வழங்கினார்கள் - இந்த களியாட்ட முயற்சியில் ஈடுபடும் நபர் கூட இரண்டு இலட்சம் வழங்க கை உயர்த்தினார் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.
எல்லோரும் அறிந்த விடயம் தான் நம் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் , இந்த வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ஊரில் மட்டும் சேர்க்கப்பட்ட பணம் ஏழு இலட்சங்கள்- அதுவும் சிறிய குழுவினரின் முயற்சியில் நடந்தமை குறிப்பிட தக்கது. இது இரண்டும் இல்லாமல் நமது ஊரை சேர்ந்த இளைஞ்சர்கள் வெளிநாட்டில் அமைத்துள்ள அமைப்புக்களான PAQ / YSF போன்ற அமைப்புக்கள் நமது ஊரின் கல்விக்கு பல உதவிகளை தொடர்ச்சியாக செய்கின்றனர்.
இதிலிருந்தெல்லாம் நாம் இலகுவாக விளங்கி கொள்வது யாதெனில் பஸ் விடயம் என்பது நிகழ்வை சாதிக்க சொல்லப்படும் சாட்டுப்போக்குகள் அன்றி வேறொன்றும் இல்லை.
இப்படியெல்லாம் இருக்கும் போது பஸ் ஒன்று வேண்டும் , அதற்கான காரணம் என்பவற்றை இதற்கு முன்னர் மக்களிடம் விளக்கி உதவி கோரி இருந்தால் அதனை சாத்திய படுத்தி இருக்கலாம் என்பது திண்ணம். ஆனால் இதனை பாடசாலை நிர்வாகம் ஏன் செய்யவில்லை ? என்பதற்கு அவர்கள் தரப்போகும் விளக்கம் தான் என்ன ?? இது தவிர எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் உள்ளன ,அப்படி எந்த நிறுவனம் ஒன்றிடமோ ? வெளிநாட்டு தூதரகங்கள் மூலமோ ? ஒரு பஸ்ஸை பெற முடியாதா ? இதற்கான முயற்சிகளை பாடசாலை நிர்வாகம் செய்ததா ? என்றெல்லாம் தேடிப்பார்த்தால் விடை பூச்சியம் தான். தங்களின் வருங்கால அரசியலை நிலை நிறுத்தவும் , தன்னை இந்த ஊரின் ஐயாவகவும் நிரூபிக்க சிலர் எடுக்கும் தீவிர முயற்சியே இதுவாகும்.
இவ்வாறான விடயங்களை வழைமையாக எதிர்க்கும் ஜமாத்தே இஸ்லாமி இதுவரை மௌனமாய் இருப்பது ஏன் ? எனும் கேள்வியுடன் அவர்களை விட்டால் எதிர்க்க வேறு இயக்கங்களுக்கு முதுகெலும்பு இல்லையா என்றும் பேசப்படுகிறது.
இதற்கு குறிப்பிட பட்டுள்ள திகதியில் கூட மயக்கம் உள்ளது. எதிர்வரும் ஆறாம் திகதி நிகழ்வு ஆரம்பம் என்றால் அந்த தினம் பெரும்பாலும் பெருநாள் அல்லது நோன்பு முப்பதாகும். அப்படியெனில் தொழுகை ஏற்பாடுகள் எப்படி அமையும் ? வழமை போன்று காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை தனது கொத்பாவில் சொல்லும் மௌலவி மின்ஹாஜ் அவர்கள் இம்முறை மக்களுக்கு எதை சொல்லபோகிறார் ? என்பது வரை இன்று சாப்பாட்டு கடை மேசைகளில் கூட இந்த விடயங்கள் அலசலுக்கு வந்துள்ளது. ஆகவே , இந்த விடயத்தின் உச்ச கட்ட எதிர்ப்பாக பெருநாள் அன்று கறுப்பு பட்டி அணிதல் எனும் நிலைப்பாட்டிற்கு கூட சிலர் வந்துள்ளமை அவதானிக்க பட வேண்டியுள்ளது. இப்படி பல பேச்சுக்களுடன் நிகழ்வு நடந்து , அந்த நிகழ்வின் மூலம் இலாபம் கிடைத்து , அந்த இலாபம் மூலம் நமக்கு பஸ் கிடைக்கும் எனில் கிடைக்கட்டும், அதை வைத்து மாணவர்களுக்கு சாரதி பயிற்சி சரி கொடுக்கலாம் - இது சரி காரணமாய் அமையட்டும்.
-இமாரத் அலி -
மறு புறம் புத்தளத்தின் நவீன ஐயாக்களாக சிலர் பிரகாசிக்கட்டும்.

Disqus Comments