உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழும் பெண்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் அடங்கிய பட்டியலில், 51 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டு பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அவர் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வரும் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.