Tuesday, June 7, 2016

அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது மஸ்தான் எம்பிக்கு பிரதியமைச்சர் பதவி

விரைவில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தானுக்கு பிரதியமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஜனாதிபதிக்கும் இவருக்குமிடையில் நெருக்கமான உறவுகள் காணப்படுவதாகவும் அதன் ஒரு கட்டமாகவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் வவுனியா விஜயம் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இவரார்.

அத்துடன் கடந்த தேர்தல் காலத்தில் தனக்கு கட்சியினால் அனர்த்த நிவாரண சேவைகள் பிரதியமைச்சு பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும் அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செட்டிகுளம் சர்ஜான் 
Disqus Comments