Friday, June 17, 2016

சவுதி அரேபிய பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் சுகப் பிரசவம்.

அமெரிக்காவில் இருந்து சவுதி அரேபியா நோக்கி சென்ற சவுதி எயார்லைன்ஸ் விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் 30000 அடி உயர்த்தில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் பயணித்த பிரயாணி ஒருவருக்கு பிரசவ வேதனை ஏற்பட விமான ஊழியர்களின் உதவியுடன் அவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண்மணி சவுதி நாட்டவர் எனவும் அவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய போதே இவ்வாறு நடுவானில் பிரசவிக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Disqus Comments