Sunday, June 5, 2016

ஊக்கமருந்து விவகாரம்: போல்ட்டின் ஒலிம்பிக் பதக்கம் பறிபோகிறதா?

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது, உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட் வென்றெடுத்த மூன்று தங்கங்களில், ஒன்று பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 4x100மீற்றர் அஞ்சலோட்டத்தில், போல்டின் சக அணி வீரர்களில் ஒருவரான நெஸ்டா காட்டரின் ஏ மாதிரியில், தடை செய்யப்பட்ட மெதயில்ஹெக்ஸானமியன் பயன்படுத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியமையையடுத்தே பதக்கம் பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது பெறப்பட்ட 454 மாதிரிகள் மீளச்சோதனை செய்யப்பட்டதன் பின்பே மேற்படித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கார்ட்டர் கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், பி மாதிரியிலும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments