வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் பெண்களின் வயதெல்லையை குறைப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பை பெற செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் பெண்களின் வயதெல்லை 25 ஆக இருக்கின்ற நிலையில் வயதெல்லையை 22 ஆக குறைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தீர்மானித்துள்ளார்.
குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் பெண்களின் வயதெல்லையை குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.