சுஐப் எம்.காசிம்
15 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சர் றிசாத் இன்று
காலை (14/07/2016) அறிவித்தார். அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின் நிகழ்வொன்றில்
உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இந்தப் பொருட்களுக்கான விலைகள் இன்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு
உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
|
01.
|
மைசூர் பருப்பு
|
ரூபா. 169
|
|
02.
|
நெத்தலி (தாய்)
நெத்தலி (துபாய்)
|
ரூபா. 495
ரூபா. 410
|
|
03.
|
கடலை
|
ரூபா. 260
|
|
04.
|
பயறு
|
ரூபா. 220
|
|
05.
|
கோதுமை மா
|
ரூபா. 87
|
|
06.
|
முழு ஆடை பால்
மா -(இறக்குமதி)
-(உள்ளூர்)
|
ரூபா. 810
ரூபா. 735
|
|
07.
|
கோழி இறைச்சி -(தோலுடன்)
கோழி இறைச்சி -(தோலகற்றியது)
|
ரூபா. 410
ரூபா. 495
|
|
08.
|
உருளைக்கிழங்கு
-(இறக்குமதி)
|
ரூபா. 120
|
|
09.
|
பெரிய
வெங்காயம் -(இறக்குமதி)
|
ரூபா. 78
|
|
10.
|
செத்தல்
மிளகாய்
|
ரூபா. 385
|
|
11.
|
கருவாடு கட்டா
|
ரூபா. 110
|
|
12.
|
கருவாடு சாலை
|
ரூபா. 425
|
|
13.
|
மாசி
|
ரூபா. 1500
|
|
14.
|
சஸ்டோஜன்
|
ரூபா. 1500
|
|
15.
|
சீனி
|
ரூபா. 95
|
தகரத்தில் அடைக்கப்பட்ட டின் மீன் (480g) 140 ரூபாவுக்கும், (105g) 70 ரூபாவுக்கும்
கடந்த காலத்தில் இருந்தது போன்றே பழைய விலைக்கு வழங்கப்படும்.
பாசிப்பயறு கடந்த காலங்களை விட 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர்
குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு மாற்றமாக எவராவது செயற்பட்டால், உரிய நடவடிக்கை
எடுக்கப்படுமெனவும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடெங்கும் இவற்றைக்
கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
